ப்பா.. என்னம்மா ஊட்டி விடுறாரு டெமி.. பார்த்து ஒட்டகச்சிவிங்கி கையை கடிச்சிடப் போகுது!
ஆஸ்திரேலியா: பிரபல நடிகையும் இன்ஸ்டாகிராம் மாடலுமான டெமி ரோஸ் ஒட்டகசிவிங்கி ஒன்றுக்கு உணவு ஊட்டி விடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து நடிகையான டெமி ரோஸ் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே ஒட்டகசிவிங்கி ஒன்றுக்கு தனது கையாள் ஊட்டி விடுகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள நிலையில், உயிரியல் பூங்கா ஒன்றில் இந்த வீடியோவை அவர் எடுத்துள்ளார்.

சுற்றுலா பைத்தியம்
கொரோனா காலத்தில் லண்டனில் லாக்டவுனில் சிக்கித் தவித்தது குறித்து ரொம்பவே போரிங் என போஸ்ட் போட்ட நடிகை டெமி ரோஸ், ஸ்பெயின் நாட்டின் இபிசா கடற்கரை தீவிற்கு சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைத்ததும் அங்கிருந்து சிட்டென பறந்து விட்டார்.

ஏகப்பட்ட போட்டோக்கள்
இபிசா கடற்கரை தீவில் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்த டெமி ரோஸ், ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக தொடர்ந்து பதிவிட்டு ஒட்டுமொத்த சமூக வலைதள கவனத்தையும் ஈர்த்தார். சில அரை நிர்வாண புகைப்படங்களையும் வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்தார்.

மாலத்தீவில் ஒரு மாதம்
உள்ளூர் நடிகைகள் முதல் சர்வதேச நடிகைகள் வரை திடீரென மாலத்தீவில் சிறிது காலம் சுற்றுலா செல்ல ஆரம்பித்தனர். கொரோனாவுக்கு பிறகு மீண்டும் சுற்றுலா தொழிலை முடுக்கி விடவே, பிரபல நடிகைகளுக்கு குறைந்த செலவில் சுற்றுலா செல்லும் வாய்ப்பை மாலத்தீவு அரசு ஏற்படுத்தியது பின்னர் தெரிய வந்தது.

ஆப்பிரிக்கா காட்டில்
ஸ்பெயின் நாட்டின் இபிசா கடற்கரை தீவில் டூர் அடித்த அளவுக்கு மாலத்தீவில் நீண்ட நாட்கள் நடிகை டெமி ரோஸ் தங்கியிருக்கவில்லை. ஒரே மாதத்தில் மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு, தனது கேமரா குழுவுடன் ஆப்பிரிக்கா காட்டில் தற்போது ஹாயாக சுற்றித் திரிகிறார்.

ஒட்டகசிவிங்கிக்கு ஊட்டிவிட்டு
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் தற்போது முகாமிட்டுள்ள நடிகை டெமி ரோஸ், உயிரியல் பூங்கா ஒன்றில் இருக்கும் ஒட்டகசிவிங்கிக்கு ஊஞ்சல் ஆடிக் கொண்டே ஊட்டி விடும் வீடியோவையும் போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தற்போது வைரலாக்கி உள்ளார்.

கையை கடிச்சிடப் போகுது
நடிகையும் சர்வதேச இன்ஸ்டாகிராம் மாடலுமான டெமி ரோஸிடம், அவரது ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில், பார்த்து உஷாரா இருங்க, உங்க கையும் பன்னு மாதிரி சாஃப்ட்டா இருக்குன்னு அதையும் சேர்த்து கடிச்சிடப் போகுது என கிண்டல் கமெண்ட்டுகளை போட்டு லட்சக் கணக்கான லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











