காதலிக்கு கமகமக்க சமைத்துப் போட்டு காதலைச் சொன்ன 'மிஸ்டர் அழகன்' க்ளூனி!

வாஷிங்டன்: ஜார்ஜ் க்ளூனி - பல காலமாக இவர்தான் ஹாலிவுட் கவர்ச்சிக் கதநாயகன்.

கோடானு கோடி பெண்களின் மனதை இன்னும் கூட வசீகரிப்பவர்.

52 வயதான இவர் சமீபத்தில் 36 வயதான அமல் அலாமுதீனுடன் காதல் வசப்பட்டு தற்போது திருமணத்தை நோக்கியும் போய் விட்டார்.

காதலியை அசத்திய க்ளூனி:

காதலியை அசத்திய க்ளூனி:

ஆனால், தனது காதலைச் சொன்னபோதும், பின்னர் விருந்துக்கு அமலை வரவழைத்தபோதும் இவர் நடந்து கொண்ட விதம் சுவாரஸ்யமானது. அதாவது தான் ஒரு மிகப் பெரிய கோடீஸ்வரர், பந்தா, பகட்டு என்று காட்டிக் கொள்ளாமல் மிகவும் எளிமையாக தனது காதலிக்கு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் க்ளூனி. அதுவும் எப்படி என்றால் அவரே அவரது கையால் சமைத்து காதலிக்குக் கொடுத்துள்ளார்.

ஸ்டுடியோவில் திருமணம்:

ஸ்டுடியோவில் திருமணம்:

மேலும் தனது திருமணத்தையும் ஆடம்பரமாகச் செய்ய விரும்பாமல் கலிபோர்னியாவில் உள்ள தனது ஸ்டுடியோ சிட்டியிலேயே நடத்தவும் அவர் காதலியிடம் கூறி விட்டாராம்.

சொந்தமாக சமையல்:

சொந்தமாக சமையல்:

இவர் அமலிடம் காதலைச் சொன்னதே வித்தியாசமானதாக இருந்ததாம். அதாவது தனது லாஸ் ஏஞ்செல்ஸ் வீட்டுக்கு அமலை வரவழைத்து அவருக்கு தனது கையால் சமைத்துப் போட்டாராம். அதைச் சாப்பிட்டு முடித்தும் காதலைச் சொன்னாராம் க்ளூனி.

200 கோடி சொத்து:

200 கோடி சொத்து:

க்ளூனிக்கு 200 மில்லியன் டாலர் சொத்து உள்ளது என்பது நினைவிருக்கலாம். ஆனால் மிகவும் எளிமையானவர் க்ளூனி என்பதை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.

சர்ப்ரைஸ் சமையல்:

சர்ப்ரைஸ் சமையல்:

ஏப்ரல் 22 ஆம் தேதி க்ளூனி வீட்டுக்குப் போனார் அமல். அப்போது மதிய உணவை க்ளூனியே சமைத்தாராம். அமலுக்குக் கொடுத்து அவரை சர்ப்ரைஸ் செய்தாராம். பின்னர் ஆங்கிலேய வழக்கப்படி முழங்காலிட்டு அமர்ந்து காதலிக்கு மோதிரம் கொடுத்தாராம்.

காதல்பரிசு வைர மோதிரம்:

காதல்பரிசு வைர மோதிரம்:

இந்த வைர மோதிரத்தை டிசைன் செய்ததிலும் க்ளூனியின் பங்குண்டாம். தனது காதலையும், திருமண முடிவையும் அமல் உடனடியாக ஏற்றுக் கொண்டதால் க்ளூனி உற்சாகமாகி விட்டாராம். அதன் பின்னர் அன்று இரவே தனது நண்பர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் அவரே போன் செய்து விஷயத்தைச் சொன்னாராம்.

செப்டம்பரில் திருமணம்:

செப்டம்பரில் திருமணம்:

இவர்களது திருமணம் செப்டம்பரில் நடைபெறலாம் என்று பேச்சு அடிபடுகிறது. பீப்பிள்ஸ் பத்திரிக்கையும் இவ்வாறே தெரிவிக்கிறது.லண்டனைச் சேர்ந்தவர் அமல். இவர் ஒரு மனித உரிமை ஆர்வலர், வழக்கறிஞர். முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னானிடம் ஆலோசகராக இருந்தவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X