ஹாலிவுட்டில் மீண்டும் தனுஷ்.. 'அவெஞ்சர்ஸ்' இயக்குனருடன் இணைந்தார்.. நெட்பிளிக்ஸ் அறிவிப்பு!

By

சென்னை: அவெஞ்சர்ஸ் இயக்குனர் இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இதை நெட்பிளிக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. இதை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயின். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உட்பட பலர் நடித்துள்ளனர்.

கர்ணன் படப்பிடிப்பு

கர்ணன் படப்பிடிப்பு

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர் நடிக்கும் கர்ணன் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இப்போது அட்ரங்கி ரே என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதை ஆனந்த்.எல்.ராய் இயக்குகிறார்.

சாரா அலி கான்

சாரா அலி கான்

இவர், தனுஷ் நடித்த ராஞ்ஜனா என்ற படத்தை இயக்கியவர். இந்த படத்தில் அக்‌ஷய் குமார், பாலிவுட்டின் இளம் ஹீரோயின் சாரா அலி கான் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். பூஷன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிமன்ஷு சர்மா கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

தடைபட்ட ஷூட்டிங்

தடைபட்ட ஷூட்டிங்

தனுஷ், சாரா அலிகான் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் கொரோனா லாக்டவுனால் ஷூட்டிங் தடைபட்டது. லாக்டவுனுக்கு பிறகு இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. இந் நிலையில் தனுஷின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

தி கிரே மேன்

தி கிரே மேன்

நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் 'தி கிரே மேன்' என்னும் படத்தில் தனுஷ் இணைந்துள்ளார். மார்க் கிரேனியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை கொண்ட இதில், தனுஷின் கேரக்டர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

ரூஸோ பிரதர்ஸ்

ரூஸோ பிரதர்ஸ்

அவென்சர்ஸ் படத்தை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் என அழைக்கப்படும் அந்தோணி மற்றும் ஜோ ரூசோ இயக்கும் இந்தப் படத்தில் ஜெசிக்கா ஹென்விக், வாக்னர் மோரா, ஜூலியா பட்டர்ஸ், கிறிஸ் இவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டி ஆர்மஸ் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் தனுஷும் முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார்.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த கவுரவம் என சோசியல் மீடியாவில் ரசிகர்கள் , தனுஷை கொண்டாடி வருகின்றனர். #TheGrayMan என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. இதற்கு முன் 'தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர்' என்ற ஆங்கில படத்தில் தனுஷ் நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X