ஹாலிவுட் படம் டிராப் இல்லை: ஹீரோ தனுஷ் தான், ஆனால்...

By Siva

சென்னை: தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் அவர் தான் ஹீரோ. ஆனால் அவரை தவிர மற்றவர்கள் எல்லோரும் மாறிவிட்டனர்.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றார் தனுஷ். அங்கிருந்து அவர் ஹாலிவுட்டும் செல்லவிருந்தார். தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி ஃபகிர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

எங்கள் அண்ணா ஹாலிவுட் போகிறார் என்று தனுஷ் ரசிகர்கள் துள்ளிக் குதித்தார்கள்.

இயக்குனர்

இயக்குனர்

தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி ஃபகிர் படத்தை இயக்குவதாக இருந்த மர்ஜான் சத்ராபிக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து சத்ராபி படத்தில் இருந்து விலகினார்.

டிராப்

டிராப்

தனுஷ் ஒப்பந்தமான படத்தில் பிரபல நடிகை உமா தர்மன் நடிப்பதாக வேறு கூறப்பட்டது. இந்நிலையில் சத்ராபி படத்தில் இருந்து வெளியேற படம் டிராப்பானதாக செய்திகள் வெளியாகின.

புதிய இயக்குனர்

புதிய இயக்குனர்

சத்ராபி வெளியேறிய நிலையில் ஸ்டார்பக் பட இயக்குனர் கென் ஸ்காட் தனுஷ் படத்தை இயக்க உள்ளார். மேலும் படத்தில் உமா தர்மன் அல்ல மாறாக பெரினிஸ் பெஜோ நடிக்க உள்ளாராம்.

தனுஷ்

தனுஷ்

தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி ஃபகிர் படத்தில் தனுஷை தவிர மற்றவர்கள் மாறியுள்ளனர். தனுஷ் வரும் மே மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ஆக, தனுஷ் ஹாலிவுட் செல்வது உறுதியாகிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X