அவென்சர்ஸ் இயக்குனர்களின் 'தி கிரே மேன்' ஷூட்டிங்.. ஹாலிவுட் செல்லும் நடிகர் தனுஷ்!
சென்னை: ஹாலிவுட் படத்துக்கு செல்ல இருப்பதால், கார்த்தி நரேன் இயக்கும் படத்தில் மே மாதம்தான் தனுஷ் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. இதை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.
ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயின். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உட்பட பலர் நடித்துள்ளனர்.

கர்ணன் ஷூட்டிங்
இதையடுத்து அவர் நடிக்கும் கர்ணன் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. இதை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே அட்ரங்கி ரே என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதை ஆனந்த்.எல்.ராய் இயக்குகிறார்.

சாரா அலி கான்
இவர், தனுஷ் நடித்த ராஞ்ஜனா என்ற படத்தை இயக்கியவர். இந்த படத்தில் அக்ஷய் குமார், சாரா அலி கான் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இதற்கிடையே, கார்த்திக் நரேன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வந்தது.

மாளவிகா மோகனன்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், நடிகை மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார்.. இந்தப் படத்தின் ஷூட்டிங் நேற்று நிறைவு பெற்றது. இதை மாளவிகா சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அடுத்த ஷெட்யூலை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.

தி கிரே மேன்
இந்நிலையில், நடிகர் தனுஷ், நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் 'தி கிரே மேன்' என்னும் படத்தில் நடிக்கிறார். மார்க் கிரேனியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் கதையை கொண்ட இதில், தனுஷின் கேரக்டர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

ரூஸோ பிரதர்ஸ்
அவென்சர்ஸ் படத்தை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் என அழைக்கப்படும் அந்தோணி மற்றும் ஜோ ரூசோ இயக்குகின்றனர். இந்தப் படத்தில் ஜெசிக்கா ஹென்விக், வாக்னர் மோரா, ஜூலியா பட்டர்ஸ், கிறிஸ் இவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டி ஆர்மஸ் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் தனுஷும் முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார்.

பங்கேற்காத காட்சி
இதன் ஷுட்டிங்கிற்காக, நடிகர் தனுஷ் செல்ல இருப்பதால் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில் மே மாதம்தான் கலந்து கொள்ள இருக்கிறார். அதனால் இடைபட்ட காலத்தில் அவர் பங்கேற்காத காட்சிகளை படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











