நீ நடிம்மா.. நான் பாத்துக்குறேன்.. ஆபாச படங்களில் நடிக்க மகளுக்கு அனுமதி அளித்த பிரபல இயக்குநர்!

சென்னை: பிரபல இயக்குநர் தனது மகளை ஆபாச படங்களில் நடிக்க அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண படங்களில் கூட ஆபாச காட்சிகள் இருந்தால்தான் காண கூட்டம் வருகிறது. அதற்கான நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் கூட ஆபாசம் நிறைந்த ஐட்டம் பாடல் ஒன்று புகுத்தப்பட்டு வருகிறது.

என்னதான் சீரியஸான ஸ்டோரி என்றாலும் அப்படி ஒரு காட்சி அல்லது ஒரு பாடலாவது நிச்சயம் இடம்பெற்று விடுகிறது. ஹீரோவுக்கு என இல்லாவிட்டாலும் வில்லன் மூலமாவது இந்த காட்சிகள் நுழைக்கப்பட்டு வருகின்றன.

பிரபல இயக்குநர்

பிரபல இயக்குநர்

இந்த வழக்கம் தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆபாச படங்களுக்கான மவுசும் என்றும் குறைவதில்லை. மார்க்கெட் காலியான சில நடிகைகள் கூட ஆபாச படங்களில் நடிக்க சென்று விடுகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குநர் ஒருவர் தனது மகளை ஆபாச படங்களில் நடிக்க வைக்க அனுமதி அளித்துள்ளார்.

ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருது

உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்த படம் ''ஜூராசிக் பார்க்''. இந்தப் படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கினார். மேலும் ''ஹுக்'', ''கேச் மீ இஃப் யூ கேன்'', ''வார் ஆஃப் த வேர்ட்ஸ்'' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி இருக்கிறார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான இவர் ஆஸ்கர் விருதும் பெற்றிருக்கிறார்.

ஆபாச படங்கள்

ஆபாச படங்கள்

இந்நிலையில் இவரது வளர்ப்பு மகள் மைக்கேலா ஸ்பீல்பெர்க் ஆபாச படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ஹாலிவுட் மட்டுமின்றி உலக சினிமா ஆர்வலர்களை அதிர வைத்துள்ளது. தற்போது அதுபோன்ற படங்களை மைக்கேலா தயாரித்து வருகிறார். ஆனால் அதில் எந்த திருப்தியும் இல்லாததால் அதுபோன்று நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

திருப்திப்படுத்த முடியும்

திருப்திப்படுத்த முடியும்

மகளின் இந்த முடிவுக்கு அப்பாவான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அனுமதி கொடுத்திருப்பதோடு ஆதரவும் தெரிவித்திருக்கிறார். ஆபாச படங்களில் நடிக்க லைசென்ஸ் கிடைத்தவுடன் மைக்கேலா தனது நடிப்பு பணியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆபாச படங்களில் நடிப்பதன் மூலம் மற்றவர்களை திருப்திப்படுத்த முடியும் என நம்புவதாக அவர் கூறியிருக்கிறார்.

ட்ரோல்

ட்ரோல்

மைக்கேலாவின் இந்த முடிவுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகள் ஆபாச படங்களில் நடிக்க ஆசைப்படுவதும், அதற்கு தந்தை அனுமதி அளிப்பதையும் பார்த்த நெட்டிசன்கள் நல்ல குடும்பம் என்று ட்ரொல் செய்து வருகின்றனர். முன்னணி இயக்குநர் தனது மகளை ஆபாச படங்களில் நடிக்க அனுமதிப்பது வேதனையளிப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெட்கப்பட தேவையில்லை

வெட்கப்பட தேவையில்லை

இதனிடையே மகள் மைக்கேலாவின் முடிவை கேட்டு முதலில் தந்தையான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பெரும் சங்கடத்திற்கு ஆளானதாகவும் பின்னர் அவரது விருப்பத்தை புரிந்து கொண்டு ஆதரவு தெரிவித்ததாகவும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் குடும்ப நண்பர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள மைக்கேலா பார்ன் ஸ்டாராக இருப்பதற்காக வெட்கப்பட தேவையில்லை என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X