twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அங்கயும் இப்படித்தான்..! லாக்டவுனால் டிஸ்னி, மார்வல் படங்களின் ஷூட்டிங் இப்போதைக்கு தொடங்காது!

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: டிஸ்னி மற்றும் மார்வல் படங்களின் படப்பிடிப்பு இப்போதைக்குத் தொடங்கப்படாது என்று டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் டிஸ்னி. ஏராளமான படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கும் நிறுவனம் இது.

    சூப்பர் ஹீரோ, அனிமேஷன் உட்பட பல்வேறு வகைப் படங்களை உருவாக்கும் இந்நிறுவனப் படங்களுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் உண்டு.

    ஜீன்ஸ் பேன்ட்ட ஏன்மா அங்க போட்டுருக்க.. இன்ஸ்டாகிராமை ஹீட்டாக்கும் தாரா சுதாரியாவின் ஹாட் போட்டோ!ஜீன்ஸ் பேன்ட்ட ஏன்மா அங்க போட்டுருக்க.. இன்ஸ்டாகிராமை ஹீட்டாக்கும் தாரா சுதாரியாவின் ஹாட் போட்டோ!

    படப்பிடிப்புப் பணி

    படப்பிடிப்புப் பணி

    கொரோனா காரணமாக உலகம் முழுவதும் சினிமா படப்பிடிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா லாக்டவுன் முடிந்து எப்போது ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள சில நாடுகளில் ஷூட்டிங் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அனிமேஷன்

    அனிமேஷன்

    இந்த லாக்டவுன் காரணமாக, டிஸ்னி மற்றும் மார்வல் படங்களும் பாதிக்கப் பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் 'ஷாங்-சி அண்ட் த லெஜண்ட் ஆப் த டென் ரிங்ஸ், ஹிஸ்டாரிக்கல் திரில்லர் படமான, தி லாஸ்ட் டூயல், அனிமேஷன் படமான, தி லிட்டில் மெர்மைட், நைட்மேர் அலே, ஷரங்க், பீடர் பான் அண்ட் வெண்டி ஆகிய படங்களின் தயாரிப்பு பணிகள், இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஸ்ட்ரீமிங்கில்

    ஸ்ட்ரீமிங்கில்

    மேலும் இந்நிறுவன படங்களின் ரிலீஸ் தேதியும் மாற்றி வைக்கப்பட்டுள்ளன. அதனால் இப்போதைக்கு படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பில்லை என்று டிஸ்னி தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் 'ஆர்டெமிஸ் ஃபவுல்' என்ற படத்தை நேரடியாக டிஸ்னி ஸ்ட்ரீமிங்கில், இந்த மாத இறுதியில் வெளியிடவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுபற்றி டிஸ்னி நிறுவன தலைமை செயல் அதிகாரி பாக் சபெக் (Bob Chapek) கூறியதாவது:

    தியேட்டர் அனுபவம்

    தியேட்டர் அனுபவம்

    'இப்போதைக்கு படப்பிடிப்புப் பணிகளை ஆரம்பிக்கும் திட்டம் எதுவும் இல்லை. தயாரிப்பு பணியில் ஈடுபட இருக்கும் எங்கள் பணியாளர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதனால் சுகாதார அதிகாரிகள் சொல்லும் வரை படப்பிடிப்பு தொடங்காது. பிரம்மாண்டமான படங்களைத் தியேட்டரில் பார்க்கும் அனுபவம் பற்றி எங்களுக்குத் தெரியும்' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Production of highly anticipated Disney as well as Marvel movies was suspended due to the COVID 19 pandemic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X