டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவர்ஸ்.. எக்ஸ்மேன், ஃபென்டாஸ்டிக் 4, அயன்மேன், டெட்பூல் கூட இருக்காங்களா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: நிஜமாகவே டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் படம் ரசிகர்களை பைத்தியமாக்கப் போவது கன்ஃபார்ம் தான்.

Recommended Video

Doctor Strange இல் Iron Man ஆக வரப்போகும் Tom Cruise | Rewind Raja | Filmibeat Tamil

சிறுவயது முதல் ரசிகர்கள் ரசித்துப் பார்த்த பல சூப்பர் ஹீரோ படங்களின் கலவையாக இந்த டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் உருவாகி உள்ளது சமீபத்தில் வெளியான டிரைலரில் மறைமுகமாக காட்டப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொன்றாக ரசிகர்கள் டீகோட் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தில் சர்ப்ரைஸாக 3 பீட்டர் பார்க்கர்களும் அவர்களின் வில்லன்களும் வந்த நிலையில், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவர்ஸில் எக்ஸ்மேன், ஃபென்டாஸ்டிக் 4, அயன்மேன் மற்றும் டெட்பூல் பட நடிகர்கள் சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருப்பதாக கண்டுபிடித்து வருகின்றனர்.

புரொபஸர் எக்ஸ்

புரொபஸர் எக்ஸ்

எக்ஸ்மேன் படத்தில் புரொபஸர் எக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த பேட்ரிக் ஸ்டீவர்ட் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் படத்தில் இடம்பிடித்துள்ளார் என ஒரே ஒரு நொடி வாய்ஸ் ஓவரை வைத்து ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் கைது செய்யப்பட்டு குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு அந்த உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும் என கூறுபவர் அவர் தான் என்கின்றனர்.

ரீட் ரிச்சர்ட்

ரீட் ரிச்சர்ட்

அதே போல ஃபென்டாஸ்டிக் 4 படத்தில் ரீட் ரிச்சர்ட்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த அயோன் க்ரூஃபர்டும் நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. பூமர் விளம்பரத்தில் வரும் சூப்பர் ஹீரோ போல இவரது கைகளும், கால்களும் இஷ்டத்துக்கு நீள்வதை 2015ல் வெளியான ஃபென்டாஸ்டிக் 4 படத்தில் பார்த்து ரசிகர்கள் ரசித்து இருந்த நிலையில், இந்த படத்தில் அவர் இடம்பெற்றுள்ளார் என கணித்து வருகின்றனர்.

டெட்பூல் நாயகனும்

டெட்பூல் நாயகனும்

டெட்பூல் படத்தின் நாயகனும் இந்த படத்தில் உள்ளார் என படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் உடைந்து சிதறும் கண்ணாடியில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் முகங்களை வைத்து கண்டுபிடிக்கத் தொடங்கிய ரசிகர்கள் Deadpool சூப்பர் ஹீரோவும் உள்ளார் என கண்டுபிடித்துள்ளனர்.

சுப்பீரியர் அயன்மேன்

சுப்பீரியர் அயன்மேன்

படத்தின் கதை மல்டிவெர்ஸ் என்பதால், வேறு வேறு யூனிவர்ஸில் உள்ள சூப்பர் ஹீரோக்களை ஒருங்கிணைக்கும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. காமிக்ஸில் உள்ள கதாபாத்திரங்கள் இந்த படத்தில் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். டாக்டர் ஸ்ட்ரேஞ்சை கைது செய்து அழைத்து வந்து நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடத்துவது போல இடம்பெற்றுள்ள காட்சியில் பல சேர்கள் போடப்பட்டுள்ளன.

எண்ட்கேம் வசூலை முறியடிக்குமா

எண்ட்கேம் வசூலை முறியடிக்குமா

அதில் ஒருவராக சுப்பீரியர் அயன்மேன் இருப்பார் என்றும் மற்ற பிரபலமான சூப்பர் ஹீரோக்களும் அங்கே இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்பீரியர் அயன்மேனாக டாம் க்ரூஸ் நடித்துள்ளார் என்றும் ரசிகர்கள் கணித்து வருகின்றனர். நிச்சயம் இந்த படம் வெளியானால், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X