ஸ்பைடர்மேனை மறந்து டாக்டர் ஸ்ட்ரேஞ்சை கொண்டாடிய ரசிகர்கள்.. உலகளவில் டிரெண்டான #DoctorStrange

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஸ்பைடர்மேனின் நோ வே ஹோம் படத்தின் டிரைலர் லீக்கான நிலையில், அதிகாரப்பூர்வமாக டிரைலரை மார்வெல் நிறுவனம் வெளியிட்டது.

ஸ்பைடர்மேனை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என எதிர்பார்த்தால், அதற்கு பதிலாக மல்டிவெர்ஸை ஆட்டிப் படைக்கும் டாக்டர் ஸ்ட்ரேஞ்சை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

இதற்கிடையே பழைய ஸ்பைடர் மேன் 2 படத்தின் வில்லன் டாக்டர் அக்டோபஸும் வர மார்வெல் ரசிகர்கள் டிசம்பர் மாதம் வெளியாகும் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஸ்பைடர்மேன்

ஸ்பைடர்மேன்

பீட்டர் பார்க்கர் எனும் இளைஞன் எப்படி ஸ்பைடர்மேனாக மாறி எதிரிகளை பந்தாடி மக்களை காப்பாற்றுகிறான் எனும் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட காமிக்ஸை அடிப்படையாகக் கொண்டு ஏகப்பட்ட ஸ்பைடர்மேன் படங்கள் இதுவரை வெளியாகி உள்ளன. நடிகர் டாம் ஹாலண்ட் நடிப்பில் தொடர்ச்சியாக வெளியாகும் மூன்றாவது ஸ்பைடர் மேன் படம் தான் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்.

லீக்கான டிரைலர்

லீக்கான டிரைலர்

கோலிவுட்டில் மட்டுமல்ல இதே பைரசி மற்றும் லீக் பிரச்சனை ஹாலிவுட்டிலும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் டிரைலர் லீக்கான நிலையில், படக்குழுவினர் அதிகாரப்பூர்வ டிரைலரை வழக்கம்போல வெளியிட அது உலகம் முழுக்க டிரெண்டானது.

மல்டிவெர்ஸ் மாயாஜாலம்

மல்டிவெர்ஸ் மாயாஜாலம்

இன்னும் பக்கத்து கிரகத்துக்கே போக முடியவில்லை. ஆனால், சினிமா தான் என்பதால் இஷ்டத்துக்கு மார்வெல் நிறுவனம் மல்டிவெர்ஸ் உடன் இஷ்டத்துக்கு விளையாடி வருகிறது. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், லோகி என மார்வெலில் மல்டிவெர்ஸ் மாயாஜாலங்கள் அதிகரித்து விட்டன.

ஸ்பைடர்மேனையும் விடல

ஸ்பைடர்மேனையும் விடல

நடிகர் டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவான ஸ்பைடர்மேன் ஃபார் அவே ஃப்ரம் ஹோம் படத்தில் மிஸ்ட்ரி மேன் எனும் வில்லன் வெறும் புரொஜக்டர்களை வைத்துக் கொண்டு உலகில் பிரலயங்களை உருவாக்கி காட்டி பயமுறுத்திக் கொண்டிருப்பான். இந்நிலையில், மூன்றாவது பாகத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ்சை கொண்டு வந்து ஸ்பைடர்மேன் படத்தில் மல்டிவெர்ஸ் மாயாஜாலத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஸ்பைடர்மேனுக்கு மறதி

ஸ்பைடர்மேனுக்கு மறதி

மிஸ்டரி மேனை அழித்த ஸ்பைடர்மேனை இளைஞர்கள் எதிரியாக பார்க்க அனைத்தையும் சரி செய்ய டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் செல்லும் ஸ்பைடர்மேனுக்கு அதிர்ச்சி தரும் வகையில் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் செய்யும் மல்டிவெர்ஸ் மாற்றத்தால் ஸ்பைடர்மேன் உள்பட அனைவரும் பழசை எல்லாம் மறக்கும் நபர்களாக மாறிவிட இந்த சிக்கலில் இருந்து ஸ்பைடர்மேன் தன்னையும் மற்றவர்களையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.

டாக் ஆக்

டாக் ஆக்

டாபி மார்குயிர் நடித்த ஸ்பைடர்மேன் 2வில் வில்லனாக நடித்திருந்த டாக்டர் ஆக்டோபஸ் சூரிய சக்தியை உண்டாக்குகிறேன் என வில்லனாக மாறிவிடுவார். அந்த படத்தின் கிளைமேக்ஸில் அந்த சக்தியை அழிக்கும் முயற்சியில் அவரும் நதியில் விழுந்து விடுவார். இந்நிலையில், இந்த படத்தில் மீண்டும் அவர் வரும் காட்சிகள் ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது. மல்டிவெர்ஸ் என்பதால், டாபி மார்குயிரும் ஸ்பைடர்மேனாக வருவாரா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மாஸ்டரை மிஞ்சிட்டாரு

மாஸ்டரை மிஞ்சிட்டாரு

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் அறிமுக படத்தில் நடக்கும் அதே மாயாஜால வித்தையை இந்த படத்தில் ஸ்பைடர் மேனை வைத்து டாக்டர் ஸ்ட்ரேஞ் பண்ணியிருப்பதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர். ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் இந்த ஆண்டு டிசம்பரில் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதை பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X