வாவ்.. அந்த ஹாலிவுட் படம் தமிழ்லேயும் ரிலீஸ் ஆகுதாம்.. அசத்தல் தகவல்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாரர் மற்றும் த்ரில்லர் படமான டோன்ட் பிரீத் 2 திரைப்படம் இந்தியாவில் தமிழ் உட்பட 4 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஃபெடே அல்வாரெஸ் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் டோன்ட் பிரீத்.

இந்தப் படத்தை ஃபெடே அல்வாரெஸ், ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர்களான சாம் ராய்மி, ராபர்ட் டப்பர்ட் ஆகியோருடன் இணைந்து தயாரித்திருந்தார்.

டோன்ட் பிரீத் - பெரும் வரவேற்பு

டோன்ட் பிரீத் - பெரும் வரவேற்பு

இதில் ஜானி லெவி, டிலென் மின்னட்டே, டேனியல் ஸோவெட்டோ, ஸ்டீஃபன் லாங் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஹாரர் மற்றும் த்ரில்லர் படமான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

வசூலை குவித்து சாதனை

வசூலை குவித்து சாதனை

9.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பட்ஜெட் தயாரிக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் மொத்தம் 157.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை குவித்து சாதனை படைத்தது. இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து டோன்ட் பிரீத் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார், அப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான ஃபெடே அல்வாரெஸ்.

இரண்டா ம் பாகம் தயாரிப்பு

இரண்டா ம் பாகம் தயாரிப்பு

இதனை தொடர்ந்து இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. டோன்ட் பிரீத் 2 படத்தை பிரபல பாலிவுட் இயக்குநரான ரோடோ சயாக்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தை முதல் பாகத்தை தயாரித்த ஃபெடே அல்வாரெஸ், சாம் ராய்மி மற்றும் ராபர்ட் டப்பர்ட் ஆகியோரே இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளனர்.

டோன்ட் பிரீத் 2 படம்

டோன்ட் பிரீத் 2 படம்

இப்படத்தில் ஹாலிவுட் பிரபலங்களான ஸ்டீஃபன் லாங், ப்ரின்டன் செக்ஸ்டன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டோன்ட் பிரீத் 2 திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி அமெரிக்காவில் ரிலீஸ் ஆனது. டோன்ட் பிரீத் படத்தை போன்றே டோன்ட் பிரீத் 2 திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியாவில் நான்கு மொழிகளில்

இந்தியாவில் நான்கு மொழிகளில்

இந்நிலையில் இந்தப் படம் இந்தியாவிலும் ரிலீஸ் ஆகவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஹாரர் பட ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வரும் 17 ஆம் தேதி டோன்ட் பிரீத் 2 திரைப்படம் இந்தியாவில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதோடு மட்டுமின்றி இந்தி, இங்கிலிஷ், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் இப்படம் இந்தியாவில் வெளியாகிறது.

8 ஆண்டுகள் பிறகு தொடங்கும் கதை

8 ஆண்டுகள் பிறகு தொடங்கும் கதை

இந்தியாவிலும் இப்படத்தை சோனி பிக்சர்ஸ் எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனமே ரிலீஸ் செய்கிறது. டோன்ட் பிரீத் 2 திரைப்படத்தில் நோர்மேன் நார்ட்ஸ்டார்மாக ஸ்டீஃபன் லாங்க் நடித்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது தாய் குறித்து எதுவும் அறியாத நோர்மேனின் மகளாக மேட்லின் கிரேஸ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X