Drishyam remake: ஹாலிவுட்டில் ரீமேக்காகும் த்ரிஷ்யம்.. அட இப்படி ஒரு சிறப்பு இருக்கா!

சென்னை: பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான படம் த்ரிஷ்யம். நடிகர் மோகன்லால், மீனா உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். தன்னுடைய மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயலும் இளைஞரை அவரது அம்மா தள்ளி விடும்போது அவர் கொல்லப்படுகிறார். இந்தக் கொலைப்பழியில் சிக்கும் தன்னுடைய மனைவி மற்றும் மகளை காப்பாற்றும் வகையில் மோகன்லால் அடுத்தடுத்து எந்த மாதிரியாக செயல்படுகிறார் என்பதாக இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது.

திரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் என அடுத்தடுத்த மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் அடுத்தடுத்த மொழிகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தன. தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல், கௌதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் வெளியானது. படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. தமிழில் இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Drishyam movie to be remake in English and Spanish

த்ரிஷ்யம் படம்: நடிகர் மோகன்லால், மீனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2013ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியானது த்ரிஷ்யம் படம். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். தன்னுடைய மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கும் இளைஞரை மீனா மற்றும் அவரது மகள் இணைந்து தடுக்கும்போது அவர் எதிர்பாராத விதமாக உயிரிழக்கிறார். இந்த கொலையில் சிக்கிய தன்னுடைய மனைவி மற்றும் மகளை ஹீரோ எப்படி பாதுகாக்கிறார் என்பதாக இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. உயிரிழந்த இளைஞரின் அம்மா போலீஸ் அதிகாரியாக இருக்கும் நிலையில் அவரிடம் இருந்து ஹீரோ எப்படி சாதுர்யமாக செயல்பட்டு தப்பிக்கிறார் என்பதாகவும் படத்தின் கதைக்களம் ரசிகர்களை மிரட்டியது.

Drishyam movie to be remake in English and Spanish

இந்திய மொழிகளில் த்ரிஷ்யம்: படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் நடிகர் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப்படம் வசூலை வாரி குவித்தது. அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. கொரிய மொழியில் சீரிசாக வெளியிடப்பட்டு அங்கும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. இப்படி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த த்ரிஷ்யம் திரைப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஹாலிவுட்டின் கல்ஃப் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் மற்றும் ஜோட் பிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்யவுள்ளன.

ஹாலிவுட் செல்லும் த்ரிஷ்யம்: படம் ஆங்கிலத்தில் மட்டுமில்லாமல் ஸ்பானிஷ் மொழியியிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பானோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய படம் என்ற சிறப்பை த்ரிஷ்யம் படம் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்கது

சர்வதேச மொழிகளில் ரீமேக்: பாலிவுட்டில் கடந்த 2015ம் ஆண்டில் அஜய் தேவ்கன் மற்றும் தபு லீட் கேரக்டர்களில் நடிக்க த்ரிஷ்யம் படம் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 2022ம் ஆண்டில் வெளியாகி சர்வதேச அளவில் 43 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இதனிடையே ஹாலிவுட் மற்றும் ஸ்பானிசில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டு தொடர்ந்து சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பனோரமாவின் தலைவர் தெரிவித்துள்ளார். த்ரிஷ்யம் படத்தின் சர்வதேச ரீமேக் ரைட்சை பனோரமா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X