55 வயசுல நிர்வாணமாக போஸ் கொடுத்து கலங்கடிக்கும் பிரபல நடிகை.. வதந்திகளுக்கு வேட்டு வைக்க இப்படியா?
லண்டன்: பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் ஹர்லே ஆடை ஏதும் அணியாமல் நிர்வாணமாக உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கலங்கடித்துள்ளார்.
'மம்மி' பட நடிகர் பிரண்டன் ஃபேஸரின் Bedazzled படத்தில் டெவிலாக நடித்து பிரபலமானவர் எலிசபெத் ஹர்லே.
தனது மகனுடன் இணைந்து ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தப் போவதாக வெளியான வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இப்படி போஸ் கொடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார்.

’மம்மி’ ஹீரோ
அரியா எனும் ஹாலிவுட் படத்தின் மூலம் 1978ம் ஆண்டு அறிமுகமானவர் எலிசபெத் ஹர்லே. 'மம்மி' பட நடிகர் பிரண்டன் ஃபேஸர் நடிப்பில் 2000ல் வெளியான ஃபேண்டஸி படமான Bedazzled படம் இவருக்கு உலகளவில் ரசிகர்களை பெற்றுத் தந்தது. அந்த படத்தில் டெவிலாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து இருப்பார்.

மேலாடை அணியாமல்
காஸிப் கேர்ள், வொண்டர் வுமன், பைபிள், ஷார்ப், கில் க்ரூஸ் என ஏகப்பட்ட படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து பிரபலமான எலிசபெத் ஹர்லேவுக்கு இப்போ 55 வயதாகிறது. ஆனாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான போட்டோக்களுக்கும், பிகினி, டாப்லெஸ் போட்டோக்களுக்கும் பஞ்சமே இல்லாமல் போட்டுத் தாக்கி வருகிறார்.

18 வயதில் மகன்
2007ம் ஆண்டு இந்திய தொழிலதிபர் அருண் நாயரை திருமணம் செய்து கொண்ட இவர், 2011ம் ஆண்டு குடும்ப சண்டை காரணமாக அவரை விவாகரத்து செய்து கொண்டார். ஆனால், அதற்கு முன்னதாகவே ஹாலிவுட் தயாரிப்பாளரான ஸ்டீவ் பிங்குடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு ஸ்டீவ் பிங் தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு டேமியன் ஹர்லே எனும் 18 வயது மகன் உள்ளார்.

முழு நிர்வாணமாக
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு நிர்வாணமாக இருக்கும் தனது த்ரோபேக் போட்டோ ஒன்றை ஷேர் செய்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளார் ஹாலிவுட் நடிகை எலிசபெத் ஹர்லே. சமீபத்தில் வைரலாக பரவி வரும் வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கவே இப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மகனுடன் ஷோவா?
நடிகை எலிசபெத் ஹர்லே தனது மகன் டேமியன் ஹர்லேவுடன் இணைந்து புதிதாக ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடிக்க உள்ளார் என சில மீடியாக்களில் வெளியான பொய்யான செய்தியை கண்டிக்கவே இப்படி பலரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பும் விதமாக போஸ் கொடுத்து வைரலாக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











