78 வயதில் 9 வது திருமணம் செய்யும் எலிடபெத் டெய்லர்!!

78 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் 9 வது முறையாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
சினிமாவில் நடித்ததை விட, திருமணம் செய்வதிலும் விவாகரத்து செய்வதிலும் அதிக புகழ் பெற்றவர் எலிசபெத் டெய்லர்.
இதுவரை 8 தடவை அவர் திருமணம் செய்து, விவாகரத்து பெற்றுள்ளார்.
லேரி என்பவரை கடைசியாக திருமணம் செய்தார். 1996-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.
கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனிமையில் வாழ்ந்து வந்தார். உடல்நலக் குறைபாடுகளில் அவதிப்பட்டு வந்த அவர் இப்போதுதான் குணமாகி வீடு திரும்பினார்.
2007 ல் அவருக்கும் எழுத்தாளர் சுமித் என்பவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதை எலிசபெத் டெய்லர் மறுத்தார்.
இந்த நிலையில் தற்போது ஜசன் வின்டர்ஸ் என்ற 49 வயது நபரை திருமணம் செய்யப் போவதாக எலிசபெத் டெய்லர் அறிவித்துள்ளார்.
எலிசபெத்தும் வின்டர்ஸும் நீண்ட நாள் நண்பர்களாம்.


Click it and Unblock the Notifications











