Furiosa படத்துக்கு எலான் மஸ்க் போட்ட ட்வீட் பார்த்தீங்களா?.. உலகளவில் வசூல் எத்தனை கோடி?

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜார்ஜ் மில்லர் இயக்கத்தில் ஆன்யா டெய்லர் ஜாய் மற்றும் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஃபியூரியோசா' திரைப்படம் இந்த வாரம் வெளியானது. அந்த படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலர் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.

உலக அளவில் ரசிகர்களும் விமர்சகர்களும் ஃப்யூரியஸோ படத்தை கொண்டாடி வரும் நிலையில் எக்ஸ் தளத்தின் ஓனர் எலான் மஸ்க் அந்த படம் குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

Elon Musk shares an appreciation post for Furiosa movie

ஹாலிவுட்டின் ஆக்சன் இயக்குநரான ஜார்ஜ் மில்லர் பல வருடங்களாக மேட் மேக்ஸ் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்கி வருகிறார். கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான மேட் மேக்ஸ் பியூரி திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை அள்ளிய நிலையில், இந்த வாரம் வெளியான ஃபியூரியோஸா: மேட் மேக்ஸ் சாகா படம் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் விருது விழாக்களில் மிரட்டுமா என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

அழிந்து போன உலகம்: மேட் மேக்ஸ் படங்கள் என்றாலே அழிந்து போன உலகத்தில் தண்ணீருக்கு கூட கஷ்டப்படும் மக்களுக்கு நடுவே நடைபெறும் உரிமைப் போராட்டம் தான் முக்கிய கதையாக அமைந்திருக்கும். தனது ஊரையும் பெற்றோர்களையும் அழித்து விட்ட வில்லனை பழி வாங்கத் துடிக்கும் நாயகி ஃபியூரியோஸாவின் கதையாகவே இந்த படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக்சன் சரவெடி: ஃபியூரியோஸா படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை ஆக்ஷன் சரவெடி படமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் மையக்கரு மற்றும் கதையும் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ள நிலையில், விமர்சகர்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். எத்தனை கோடி பணம் இருந்தாலும் இப்படி ஒரு படத்தை உருவாக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் ட்வீட்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி எக்ஸ் தளமாக மாற்றிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தற்போது இந்த படத்தை பார்த்து விட்டு "Could be a good one" என ட்வீட் போட்டு படத்தை பாராட்டி உள்ளார். உலகளவில் ரசிகர்கள் மீண்டும் ஹாலிவுட் படங்களை பார்க்க இவரது ட்வீட் உதவும் என தெரிகிறது.

Elon Musk shares an appreciation post for Furiosa movie

பாக்ஸ் ஆபிஸ் வசூல் எப்படி இருக்கு?: 160 மில்லியன் டாலர் பணத்தில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூலில் பெரிதாக இதுவரை கல்லா கட்டவில்லை என்றும் முதல் நாள் வசூல் அதிகபட்சமாக 35 மில்லியன் டாலர் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 400 மில்லியன் டாலர் வசூல் செய்தால் தான் இந்த படம் வெற்றி படமாக மாறும் என்றும் கூறுகின்றனர். படத்திற்கு கிடைத்துள்ள பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக வரும் நாட்களில் படம் பிக்கப் ஆனால் தான் உண்டு என்றும் வரிசையாக ஹாலிவுட் படங்கள் சொதப்பி வந்த நிலையில் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று படத்தை பார்ப்பதை விரும்புவதில்லை என்றும் கூறுகின்றனர். 160 மில்லியன் டாலர் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 1300 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் 290 கோடி தான் இதுவரை அந்த படம் வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X