twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா வைரஸ் காரணமாக மேலும் ஒரு பிரபல நடிகர் உயிரிழப்பு.. திரையுலகம் அதிர்ச்சி!

    By
    |

    லெட்டிசியா: கொரோனாவுக்கு மேலும் ஒரு நடிகர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. இந்த உயிர்கொள்ளி வைரஸுக்கு மருந்து கண்டுப்பிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக உள்ளன.

    Embrace of the Serpent actor Antonio Bolivar dies

    உலகம் முழுவதும் சுமார் 37 லட்சம் பேர், இந்த தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்தை தாண்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.

    இந்த கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. இந்த தொற்று பல ஹாலிவுட் நடிகர்களின் உயிர்களையும் காவு வாங்கி இருக்கிறது. இந்நிலையில் மேலும் ஒருவராக, பிரபல கொலம்பிய நடிகர் அண்டோனியா போலிவர் இந்த வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளார். இவர் சிரோ குர்ரா (Ciro Guerra) இயக்கிய எம்ப்ராஸ் ஆப் த செர்பன்ட் என்ற கொலம்பிய படத்தில், முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு அதில் பேசப்பட்டது.

    அது கனவு படம்.. மகாபாரதத்தை படமாக்கும் பிரமாண்ட இயக்குனர்.. கிருஷ்ணர் வேடத்துக்கு அந்த ஹீரோதானாம்!அது கனவு படம்.. மகாபாரதத்தை படமாக்கும் பிரமாண்ட இயக்குனர்.. கிருஷ்ணர் வேடத்துக்கு அந்த ஹீரோதானாம்!

    இந்த படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரையிலும் இருந்தது. சிரோ குர்ரா இயக்கி நெட்பிளிக்ஸில் வெளியான கிரீன் பிரண்டீயர் என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார்.

    இவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதை அடுத்து தெற்கு கொலம்பியா பகுதியில் உள்ள லெட்டிசியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 1 ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 72. இதையடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Actor Antonio Bolivar, who starred in Oscar-nominated feature Embrace of the Serpent, has died of coronavirus.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X