தமிழில் என்டர்ஸ் கேம்... சுட்டீஸ் ஸ்பெஷல் ஹாலிவுட் படம்!
சிறுவர்கள் சாகச படமாக ஹாலிவுட்டில் தயாரான 'என்டர்ஸ்கேம்' என்ற ஆங்கில படம் தமிழில் வருகிறது.

பிரபல எழுத்தாளர் ஆர்சன் கார்ட் நாவலை மையமாக வைத்து கேவின் ஹுட் இப்படத்தை நவீன தொழில் நுட்பத்தில் இயக்கியுள்ளார். என்டர் என்ற தைரியசாலி சிறுவனின் பராக்கிரமம் நிறைந்த சாகசங்களே கதை.

இதில் நாயகனாக வரும் 13 வயது சிறுவனுக்கு மனதில் நினைப்பதை செய்யும் சக்தி உருவாகிறது. அவனுக்கு ராணுவ பள்ளியில் பயிற்சி அளிக்கின்றனர். வேற்று கிரக மனிதர்கள் பூமி மேல் படையெடுக்க தயாராகிறார்கள்.

அவர்களை எதிர்க்க சிறுவன் என்டர் தலைமையில் சிறுவர்கள் படை உருவாக்கப்படுகிறது. அந்த படைக்கு ராணுவ அதிகாரிகள் போர் யுக்திகள் பற்றி பயிற்சி அளிக்கின்றனர். வேற்று கிரக மனிதர்கள் படையை சிறுவர்கள் படையினர் எப்படி அழித்து பூமியை காப்பாற்றுகின்றனர் என்பது கதை.
நிக்சிதா விஷன் இப்படத்தை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறது.


Click it and Unblock the Notifications











