twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வென்ட்டிலேட்டருக்காக கெஞ்சிய குடும்பம்.. ஆக்ஸிஜன் இல்லாமல் கொரோனாவுக்கு பலியான பிரபல பாடகர்!

    |

    சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் வென்ட்டிலேட்டர் வசதி கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உச்சத்தில் உள்ளது.

    எளிய மக்களின் போராட்டத்தை எடுத்துரைத்த படைப்பாளி.. எஸ்பி ஜனநாதன் பிறந்தநாள்.. பிரபல நடிகர் உருக்கம்! எளிய மக்களின் போராட்டத்தை எடுத்துரைத்த படைப்பாளி.. எஸ்பி ஜனநாதன் பிறந்தநாள்.. பிரபல நடிகர் உருக்கம்!

    இங்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் மக்கள் பெரும் அல்லலுக்கு ஆளாகியுள்ளனர்.

    பிரபல பாடகர்

    பிரபல பாடகர்

    ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் பல மாநிலங்கள் செய்வதறியாது திகைத்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல தெலுங்கு பாடகர் வென்ட்டிலேட்டர் வசதி கிடைக்காமல் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனா தொற்று

    கொரோனா தொற்று

    தெலுங்கு சினிமாவில் பிரபல பின்னணி பாடகராக வலம் வந்தவர் ஜி ஆனந்த். 67 வயதான ஜி ஆனந்த், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பிஎன் ரெட்டி நகரில் உள்ள திருமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    வென்ட்டிலேட்டர் இல்லை

    வென்ட்டிலேட்டர் இல்லை

    இந்நிலையில் அவரது ஆக்ஸிஜன் அளவு 55ஆக குறைந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு வென்ட்டிலேட்டர் தேவைப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் அனைத்து வென்ட்டிலேட்டரும் நிரம்பியிருந்ததால் அவருக்கு உரிய நேரத்தில் வென்ட்டிலேட்டர் கிடைக்கவில்லை.

    கெஞ்சிய குடும்பம்

    கெஞ்சிய குடும்பம்

    சமூக வலைதளங்கள் மூலம் அவரது குடும்பத்தினர் பலரிடமும் உதவி கேட்டு வந்தனர். இறுதியில் ஆக்ஸிஜன் அளவு முற்றிலும் குறைந்து பாடகர் ஜி ஆனந்த் நேற்று இரவு காலமானார்.

    1976 ஆம் ஆண்டு முதல்

    1976 ஆம் ஆண்டு முதல்

    64 வயதான ஜி ஆனந்த், 1976ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா அம்மாயி படத்தில் இடம் பெற்ற ஓகா வேணு வினிபிஞ்சேனு பாடலின் மூலம் அறிமுகமானார். இந்த பாடல் பெரும் வெற்றி பெற்றது.

    சென்னையில் தொடங்கி

    சென்னையில் தொடங்கி


    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பிறந்த ஆனந்த் சென்னையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பாடகர் கந்தசாலாவின் மரணத்திற்குப் பிறகு தெலுங்கு திரையுலகில் பெரும் பெயரை பெற்றார் ஆனந்த்.

    விட்டல.. விட்டல..

    விட்டல.. விட்டல..

    இவரது பிற்கால பாடல்களான திக்குலு சூடாகு ராமையா.., விட்டல விட்டல.. போன்ற பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும் ஆனந்த் பல பக்தி ஆல்பங்களையும் பாடி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Read more about: corona virus
    English summary
    Famous playback singer G Anand passed away at the age of 64 due to Corona. G Anand passed away by Oxigen level fell down to 55.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X