Mia Khalifa: ரீல்ஸ் போட்ட மியா கலிஃபா.. சினிமாவில் நடிக்க திட்டமா? ரசிகர்கள் ஜொள்ளு தாங்கல!

பாரீஸ்: ஆபாச படங்கள் மூலம் உலக அளவில் அதிகம் கவனிக்கப்பட்ட ஆபாச பட நடிகை மியா கலிஃபா. இப்போது அவர் ஆபாச படங்களில் நடிப்பதில்லை என்றாலும், ஆபாச படங்கள் மூலம் அவருக்கு கிடைத்த வெளிச்சம் உலக அளவில் கவனிக்கப்படும் பிரபலமாக மாற்றியுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக மியா கலிஃபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார். எனவே இவர் சினிமாவில் நடிக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு ஜொள்ளு வடித்து வருகிறார்கள்.

மியா கலிஃபா அடிப்படையில் லெபானன் நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் அதன் பின்னர் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். இவர் தனது 18 வது வயதிலேயே திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல் மியா கலிஃபா அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். 2014ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு வரை ஆபாச படங்களில் நடித்து வந்தார் என கூறப்படுகிறது.

ஆனால் மியா கலிஃபா அளித்த பேட்டி ஒன்றில், ஆபாச படத்தில் தான் மூன்று மாதங்கள் மட்டுமே நடித்ததாகவும், அதன் பின்னர் அதிலிருந்து வெளியேறி விட்டதாகவும் தெரிவித்தார். இது மாத்திரம் இல்லாமல் அவர் இஸ்லாமிய பெண்களைப் போல தலையில் ஹிஜாப் அணிந்து ஆபாச படத்தில் நடித்ததில்தான் பிரபலமானார். அந்த ஆபாச வீடியோ குறைந்த நேரத்தில் அதிக பார்வையாளர்களை கவர்ந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவித்தன. ஆனால் இந்த வீடியோவுக்கு பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து மியா கலிஃபாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

Fans Asking Mia Khalifa Plans To Act Cinema After Her Instagram Reels
Photo Credit:

பேசுவதை நிறுத்திய பெற்றோர்கள்: மியா கலிஃபா ஆபாச படங்களில் நடிப்பதில் இருந்து வெளியேற முக்கிய காரணமே, அவரது பெற்றோர்கள் எனவும் கூறப்படுகிறது,. மியா ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கியதுமே அவரது பெற்றோர்கள் அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டதாகவும், ஆபாச படங்களில் நடிப்பதால் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை வராது எனவும் தெரிவித்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ரீல்ஸ் வீடியோக்கள்: இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 28 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அதேபோல் எக்ஸ் பக்கத்தில் இவரை சுமார் 6.5 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். மியா தனது எக்ஸ் பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அன்றாட நடவடிக்கைகள் குறித்து பகிர்வது மட்டுமல்லாமல், உலக அளவில் கவனிக்கப்படும் அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் குறித்து விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதேபோல் பாலஸ்தீன் - இஸ்ரேல் போர் தொடர்பாக கூட பாலஸ்தீனுக்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டார்.

ஜொள்ளு வடிக்கும் ரசிகர்கள்: மியா கலிஃபா சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக பாடலுக்கு நடனமாடி வீடியோக்கள் பகிர்ந்து வருகிறார். இதனால் அவரைப் பின் தொடரும் ரசிகர்கள் மியா நீங்கள் ஏன் சினிமாக்களில் நடிக்க கூடாது எனக் கேள்வி கேட்பதுடன் தங்கள் நாட்டு சினிமாவில் நடிக்கலாமே என ஜொள்ளு வடித்து வருகிறார்கள். ஏற்கனவே ஆபாச படங்கள் மூலம் பிரபலமடைந்த நடிகை சன்னி லியோன் தற்போது அதிலிருந்து வெளியேறி, சினிமாக்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X