’நார்த் வெஸ்ட்’ இது தாங்க கிம் கர்தஷியானின் குட்டிப்பாப்பா பெயர்...
லாஸ் ஏஞ்சலெஸ்: கிம் தனது பெண் குழந்தைக்கு வித்தியாசமாக நார்த் வெஸ்ட் எனப் பெயர் சூட்டியுள்ளார்.
டிவி ரியாலிட்டி ஸ்டாரான கிம் கர்தஷியானுக்கு ஜூன் 16ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது.
பிரசவத்திற்கு என டாக்டர் குறித்துக் கொடுத்த தேதிக்கு 5 வாரங்களுக்கு முன்பே கிம்முக்கு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

நார்த் வெஸ்ட்....
32 வயதான கிம்முக்கு ‘நார்த் வெஸ்ட்' தான் முதல் குழந்தை. ஜூலை 11ம் தேதிதான் டாக்டர்கள் நிர்ணயித்த பிரசவ தேதி. ஆனால், அதற்கு முன்னதாகவே நார்த் வெஸ்ட் பிறந்து விட்டாள்.

சுகமான பிரசவம்...
பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள செடார்ஸ்- சினாய் மருத்துவமனையில் பிரசவம் நடந்தது. கிம்மின் காதலர் கென்யே வெஸ்ட், பிரசவத்தின்போது கிம்முக்கு அருகில் இருந்தார்.

பாரம்பரிய பெயர்....
கிம்மின் குழந்தைக்கு, அவர்களின் பாரம்பரிய வழக்கப்படி ‘நார்த் வெஸ்ட்' என வித்தியாசமாக பெயர் சூட்டி இருக்கிறார் கிம்.

செல்லமா ‘நாரி’...
முழுப் பெயர் தான் நார்த் வெஸ்ட். ஆனால், செல்லமாக ‘நாரி' என அழைக்கப் போகிறாராம் கிம்.

சூப்பர் கிம்...
நார்த் வெஸ்ட்-ம் சரி, நாரியும் சரி ரொம்பவே அழகாக இருப்பதாக சமூக இணைய தளங்களில் புகழ்ந்து தளுகிறார்கள் கிம்மின் ரசிகப் பெருமக்கள்.


Click it and Unblock the Notifications











