ஹாலிவுட்டின் பிரமாண்டம்.. "ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் - 10" ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போன்னு பாருங்க!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் பத்தாவது பாகத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது வரை இந்தப் படத்தின் 9 பாகங்கள் வெளிவந்துள்ளது. 9-வது பாகம் கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு நடுவே கடந்த ஜூன் மாதம் தான் வெளியானது.

வின் டீசல் முன்னணி கதாபாத்திரத்தில்

வின் டீசல் முன்னணி கதாபாத்திரத்தில்

ஜஸ்டின் லின் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் முந்தைய பாகங்களில் நாயகனாக நடித்திருந்த வின் டீசல் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் ரெஸ்ஸிலிங் வீரர் ஜான் சீனா, மிச்சல் ரோட்ரிகெஸ், டைரீஸ் கிப்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கடந்த ஜூனில் ரிலீஸ் செய்யப்பட்ட படம்

கடந்த ஜூனில் ரிலீஸ் செய்யப்பட்ட படம்

இந்தப் படத்தை 2020ஆம் ஆண்டு மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிட்ட தட்ட ஓராண்டு தாமதமாக கடந்த ஜூன் மாதம் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

உலகளவில் 400 மில்லியன் டாலருக்கு அதிகமாக

உலகளவில் 400 மில்லியன் டாலருக்கு அதிகமாக

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் உலகளவில் 400 மில்லியன் டாலருக்கு அதிகமாக வசூல் செய்தது ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படம். இதனால் கொரோனா சூழலில் அதிக தொகை வசூலித்த படம் என்ற பெருமையையும் பெற்றது ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படம்.

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 10

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 10

இதனை தொடர்ந்து ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தை இன்னும் 2 பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருப்பதாக இயக்குநர் ஜஸ்டின் லின் கூறியிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹாலிவுட் ஸ்டுடியோ யுனிவர்சல் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 10 வது பாகத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

2023 ஏப்ரல் 7 ஆம் தேதி

2023 ஏப்ரல் 7 ஆம் தேதி

அதன்படி 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி இந்தப் படம் அமெரிக்காவில் திரைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் பட வரிசையில் இறுதி அத்தியாயமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட இந்தப் படம் இந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

நிறைவுக்கு வரும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்

நிறைவுக்கு வரும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்

ஆனால் கொரோனா தொற்று அச்சுறுத்தலால் 9வது பாகம் தான் இந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜஸ்டின் லின் படத்தின் 10 மற்றும் 11 வது பாகங்களை இயக்கவுள்ளார். இதன் மூலம் யுனிவர்ஸல் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கியத் திரைப்பட வரிசையான 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' நிறைவுக்கு வருகிறது.

கிறிஸ் மோர்கன் ஸ்கிரிப்ட்

கிறிஸ் மோர்கன் ஸ்கிரிப்ட்

கடைசி இரண்டு படங்களிலும் வின் டீஸல், சங் கங், கிறிஸ் லுடக்ரிஸ் பிரிட்ஜஸ், டைரஸ் ஜிப்ஸன், மைக்கேல் ரோடிக்ரூஸ் உள்ளிட்ட மற்ற முதன்மைக் கதாபாத்திரங்கள் அனைவரும் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு கிறிஸ் மோர்கன் ஸ்கிரிப்ட்டை எழுதுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X