வின் டீசல் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9 டீசர் ரிலீஸ்.. விரைவில் டிரைலர்
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் நடிப்பில் உருவாகியுள்ள Fast and Furious 9ம் பாகத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.
வரும் ஜனவரி 31ம் தேதி ஆக்ஷன் பேக்ட் டிரைலர் வெளியாகும் என்ற அறிவிப்புடன் தற்போது வெளியாகியுள்ள டீசர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

கார் ரேஸ்
உலகளவில் கார் ரேஸ் பட ரசிகர்களுக்கு செம்ம விருந்து வைத்த படம் என்றால் அது Fast and Furious படங்கள் தான். வின் டீசல் மற்றும் பால் வாக்கரின் அதிரடியில் வெளியான அத்தனை படங்களும் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.

பால் வாக்கர் இறப்பு
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் 7ம் பாகத்துக்கு முன்னதாக பால் வாக்கர் கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது இழப்பு வின் டீசல் மற்றும் ஹாலிவுட் ரசிகர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. பால் வாக்கர் இல்லாமல் வெளியான 8ம் பாகமும் உலகளவில் பிரம்மாண்ட கலெக்ஷனை அள்ளியது.

டுவைன் ஜான்சன்
வின் டீசல், பால் வாக்கரை தொடர்ந்து ஹாலிவுட் பிரபலமான டுவைன் ஜான்சன் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு ஸ்பின் ஹாஃப் படமான ஹாப்ஸ் அண்ட் ஷா படமும் ரிலீசாகி வெற்றி பெற்றது. ஆனால், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9ம் பாகத்தில் டுவைன் ஜான்சன் நடிக்கவில்லை என்ற தகவல் அவரது ரசிகர்களை அப்செட் செய்துள்ளது.

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் டீசர்
டொமினிக் டொரெட்டோ எனும் கதாபாத்திரத்தில் கடந்த 8 பாகங்களாக நடித்து வரும் வின் டீசல், 9ம் பாகத்திலும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸின் வித்தியாசமான டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
ஃபேமிலி மேன்
ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்க சண்டை போடுவதும், கார் சேசிங்கில் மாஸ் காட்டுவதும் என நடித்து வந்த வின் டீசல் தற்போது வெளியாகியுள்ள புதிய டீசரில் ஃபேமிலி மேனாக காட்சி அளிக்கிறார். மைக்கேல் ரோட்ரிக்ஸ் மற்றும் வின் டீசலின் குழந்தை பிரையனுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற வேண்டும் என இருவரும் பாசத்தை பொழியும் படியான டீசர் வெளியாகியுள்ளது.
டிரைலர் எப்போ?
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9ம் பாகத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், வரும் வெள்ளிக்கிழமை ஜனவரி 31ம் தேதி அதிரடியான டிரைலர் வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. F9 The Fast Saga என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த படம் வரும் சம்மர் விருந்தாக திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











