அண்ணன் ஹீரோ.. தம்பி வில்லன்.. கடைசியில திருந்திடுவாரு.. ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9 கதையும் இதுதான்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ரேஸ் கார் பிரியர்களின் ஃபேவரைட்டான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்கள் ஆரம்பத்தில் பிரமிப்பை கொடுத்து வந்த நிலையில், வர வர சென்டிமென்ட் காட்சிகளை இணைக்கிறோம் என்கிற பெயரில் கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
இதுவரை வெளியான பாகங்களிலேயே சமீபத்தில் வெளியான 9ம் பாகம் போல மோசமான படம் எதுவும் இல்லை என பலரும் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.
படத்தின் ஹீரோ வின் டீசலுக்கு வில்லனாக நடித்துள்ள WWE சாம்பியன் ஜான் சீனா தான் கதையில் வின் டீசலின் தம்பி என்கிற அரத பழைய கதையை கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ராக்கெட் கார்
கார்களை பில்டிங்குகளுக்கு மேல் பறக்கவிட்டு இதற்கு முந்தைய பாகங்கள் எடுக்கப்பட்ட நிலையில், இந்த முறையில் விண்வெளிக்கே காரை அனுப்பி செயற்கைக் கோள்களை நொறுக்கும் அளவுக்கு நம்ப முடியாத ஸ்டன்ட்டுகளை அதுவும் காமெடி காட்சிகளாக வைத்து பொறுமையை சோதித்து விட்டனர். காரில் ராக்கெட் இன்ஜினை வைத்து முதல் முறை சோதிக்கும் போது வெடிக்கிறது. அதை பார்த்த பிறகும் கிளைமேக்ஸில் அந்த காட்சியை வைத்த இடத்திலேயே ரசிகர்கள் காண்டாகி விட்டனர்.

ஜான் சினா தான் வில்லன்
9வது பாகத்தில் ராக் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக இன்னொரு WWE சாம்பியனை களமிறக்க நினைத்த படக்குழு ஜான் சினாவை களமிறக்கி உள்ளது. ட்விஸ்ட் என்னன்னா வின் டீசல் ஓட தம்பியே இவர் தான் என 9வது பாகத்தில் புதிதாக பிளாஷ்பேக் கதையெல்லாம் போட்டு நல்லா ரீல் சுத்தி உள்ளனர்.

அப்பாவை கொன்று விட்டான்
ஹீரோ டொமினிக் டொரேட்டோவின் அப்பா ஜாக் டொரேட்டோ கார் ரேஸில் கலந்து கொள்ளும் போது ஏற்படும் விபத்தில் உயிரிழக்க, தனது தம்பி ஜேக்கப் தான் தந்தையை சதி செய்து கொன்று விட்டான் என பழி வாங்க துடிக்கிறார். அண்ணனிடம் கார் ரேஸில் தப்பிச் செல்லும் தம்பி ஜேக்கப் லண்டனுக்கு சென்று செல்வாக்கான நபராக மாறுகிறார்.

உலகை அழிக்கும் கேட்ஜட்
இந்த பாகத்திலும் உலகை அழிக்கும் கேட்ஜட் ஒன்று தவறாமல் இடம்பெற்றுள்ளது. அதன் சாவி ஒரு சைனீஸ் பெண் என்கிற துணை பிளாஷ்பேக் கதையும் ஓட, அந்த உலகை அழிக்கும் மிஷனில் ஈடுபட்டு வரும் தம்பியை தடுக்க தனது டீம் உடன் போராடும் வின் டீசர் தடுக்காமாலா? விட்டுவிடுவார் அவர் எப்படி கார்களை டிரக் டயர்களுக்கு நடுவே விட்டு ஓட்டியும், மலையில் ராட்டினம் போல தொங்கிக் கொண்டு சென்றும் காப்பாற்றினார் என்பதை ஆக்ஷன் நிறைந்த காட்சிகளுடன் சொல்லி உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்களில் பெரிய கூட்டம் இல்லாததால் எதிர்பார்த்த வசூலும் இல்லை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











