இன்னும் விவாகரத்து ஆகல.. அதுக்குள்ள புது காதலருடன் சுற்றும் பிரபல நடிகை.. கடலில் ஹாட் லிப் கிஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை தனது புது காதலருடன் கடற்கரையில் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ள Fast and Furious படங்களின் நாயகி ஜோர்டனா ப்ரூஸ்டர் தான் இந்த ஹாட் வைரல் படங்களுக்கு சொந்தக்காரர்.

13 ஆண்டுகாலமாக தயாரிப்பாளர் ஒருவருடன் திருமண வாழ்க்கையை நடத்தி வந்த இவர், தற்போது, விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்

1998ம் ஆண்டு வெளியான தி ஃபேகல்டி எனும் படத்தின் மூலம் ஹாலிவுட் நடிகையாக அறிமுகமானவர் ஜோர்டனா ப்ரூஸ்டர். அந்த படத்தைத் தொடர்ந்து 2001ம் ஆண்டு முதன் முதலாக வெளியான தி ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தில், நாயகன் வின் டீசலின் தங்கையாகவும் மற்றொரு நாயகனான மறைந்த நடிகர் பால் வாக்கரின் ஜோடியாகவும் நடித்திருந்தார்.

13 ஆண்டுகால திருமண வாழ்க்கை

13 ஆண்டுகால திருமண வாழ்க்கை

ஃபிரைடே 13, மியூட்டன்ட் நின்ஜா, தி பர்ஜ் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளர் ஆண்ட்ரூ ஃபார்ம் என்பவரை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நடிகை ஜோர்டனா ப்ரூஸ்டர், கிட்டத்தட்ட 13 ஆண்டுகாலம் அவருடன் திருமணம் நடத்தி வந்த ஜோர்டனா, இந்த சம்மரில் அவரை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார்.

புது காதலர்

புது காதலர்

வரும் செப்டம்பர் மாதம் தான் இவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கிடைக்க உள்ள நிலையில், கலிஃப் நகரில் உள்ள சான்டா மோனிகா கடற்கரையில், புதிய காதலருடன் உல்லாசமாக பொழுதை கழித்து வருகிறார் இந்த பிரபல ஹாலிவுட் நடிகை. அவர்கள் கடற்கரையில் செய்யும் அட்டகாச புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடலில் லிப் லாக்

கடலில் லிப் லாக்

பிகினி உடையில் நடிகை ஜோர்டனா ப்ரூஸ்டரும், சட்டை அணியாமல் உடம்பை காட்டியபடி அவரது புதிய காதலரான மசோன் மார்ஃபிட்டுடன் கடலில் இறங்கி விளையாடியது மட்டுமின்றி, அனல் பறக்க ஹாட்டான லிப் கிஸ்ஸையும் இருவரும் அடித்துள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளன.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

இந்த ஆண்டு சம்மருக்கு Fast 9 திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பிரச்சனை தலை தூக்கவே, அதன் வீரியத்தை அறிந்த கொண்ட படக்குழு ஒரே அடியாக அடுத்த ஆண்டு சம்மருக்கு இந்த படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். 9வது பாகத்திலும் நடிகை ஜோர்டனா ப்ரூஸ்டர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X