ஹேப்பி நியூஸ்.. கொரோனா பிடியில் இருந்து தப்பித்த ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் நடிகர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா வைரஸ் பிடியில் சிக்கித் தவித்து வந்த ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் நடிகர் கிறிஸ்டோபர் ஹிவ்ஜு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.
உலகளவில் கொரோனாவின் கோர பிடியில் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், டாம் ஹேங்க்ஸ், இத்ரிஸ் எல்பா உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்களும் கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கி, தொடர் சிகிச்சைக்குப் பிறகு மீண்டுள்ளனர்.
இந்நிலையில், Fast and Furious 8, கேம் ஆஃப் த்ரோன்ஸ், மேன் ஹண்ட், ஆஃப்டர் எர்த் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக கொரோனா வைரஸால் பாதித்த நிலையில், தொடர்ந்து வழங்கப்பட்ட பல வார சிகிச்சைக்குப் பிறகு தற்போது குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
View this post on InstagramA post shared by Kristofer Hivju (@khivju) on
கிறிஸ்டோபர் ஹிவ்ஜு மற்றும் அவரது மனைவி கிரை மோல்வேர் ஆகிய இருவரும் கொரோனா பிடியில் இருந்து பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் மீண்டுள்ளனர்.
கொரோனா தாக்குதலில் இருந்து மீண்ட அந்த நடிகர், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











