twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீங்கள் விரும்பிப் படித்த 'பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே' வை இனி படமாகவும் பார்க்கலாம்!

    By Sudha
    |

    லண்டன்: இங்கிலாந்து பெண் எழுத்தாளர் இ.எல். ஜேம்ஸ் எழுதி, உலகம் முழுவதும் பரபரப்பையும், கிளுகிளுப்பையும் ஏற்படுத்திய பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நாவல் இப்போது திரைப்படமாகியுள்ளது.

    2015ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது.

    ஹாலிவுட்டைச் சேர்ந்த சான் டெய்லர் உட் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

    நாயகன் ஜேமி..

    நாயகன் ஜேமி..

    ஜேமி டோர்னான்தான் இந்தப் படத்தில் கிறிஸ்டியன் கிரே வேடத்தில் நடிக்கிறார். முதலில் சார்லி ஹன்மேன் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ ஹன்மேன் விலகிக் கொள்ள உள்ளே வந்து சேர்ந்தார் ஜேமி.

    நாயகி டகோடா

    நாயகி டகோடா

    டகோடா ஜான்சன்தான் அனஸ்டசியா ஸ்டீல்... அதாவது இந்தப் படத்தின் நாயகியாக வருகிறார்.

    கடும் போட்டிக்கு மத்தியில்

    கடும் போட்டிக்கு மத்தியில்

    பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நாவலைப் படமாக்க பல முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் இந்தப் போட்டியில் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனமும், போகஸ் பீச்சர்ஸ் நிறுவனமும் இணைந்து கதையைப் படமாக்கும் உரிமையை வென்றன.

    படமாக்குவதில் ஜேம்ஸின் தலையீடு

    படமாக்குவதில் ஜேம்ஸின் தலையீடு

    உரிமையை வழங்கியபோதே, படமாக்கலில் தனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும். கதையைத் தவறாக எடுக்கக் கூடாது, தான் நினைத்த நேரத்தில் கதைப் போக்கைக் கட்டுப்படுத்த உரிமை தர வேண்டும் என்று நிபந்தனை விதித்தே கதை உரிமையைக் கொடுத்திருந்தார் இ.எல்.ஜேம்ஸ்.

    24 வயது டகோடா

    24 வயது டகோடா

    பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நாவலில் நாயகிக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். அந்த வகையில் 24 வயதான டகோடாவின் தேர்வு கன கச்சிதம் என்று பாராட்டியுள்ளனர்.

    படப்பிடிப்பின்போது நாயிடம் சிக்கிய டகோடா

    படப்பிடிப்பின்போது நாயிடம் சிக்கிய டகோடா

    கனடாவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது செட்டில் புகுந்த ஒரு நாயை டகோடா, எடுத்துக் கொஞ்ச முயன்றபோது நாய் அவரைக் கடிக்கப் பாய்ந்தது சுவாரஸ்யமான அனுபவம். ஆனால் நல்ல வேளையாக டகோடா மீது நாயின் பல் படவில்லை. கடி வாங்காமல் தப்பி விட்டார். இருந்தாலும் அந்த நாயுடன் பின்னர் நட்பு ஏற்படுத்திக் கொண்டு தூக்கிக் கொஞ்சிய பிறகே விட்டார்.

    சரி, டகோடாவின் அம்மா யாரு தெரியுமா...

    சரி, டகோடாவின் அம்மா யாரு தெரியுமா...

    டகோடாவின் அப்பா, அம்மாவும் பிரபலமான நடிகர்கள்தான். டகோடாவின் தாயார்தான் மெலனி கிரிபித். அப்பா டான் ஜான்சன்.

    சோஷியல் நெட்வொர்க் நாயகி

    சோஷியல் நெட்வொர்க் நாயகி

    இவர் ஏற்கனவே சோஷியல் நெட்வொர்க், பீஸ்ட்லி, கோட்ஸ், தியோ, சிம்பெலைன் என பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே மூலம் இப்போது பெரும் எதிர்பார்ப்புக்குரிய நாயகியாக மாறியுள்ளார்.

    படம் எப்படி இருக்குமோ...

    படம் எப்படி இருக்குமோ...

    பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நாவல் பெரும் பரபரப்புடன் விற்றுத் தீர்ந்த புத்தகமாகும். விழுந்து விழுந்து இதைப் படித்தார்கள் பெண்கள். அதே விறுவிறுப்புடன் படமும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பி விட்டது.

    2015ம் ஆண்டு காதலர் தினத்துக்கு முதல் நாளன்று அதாவது பிப்ரவரி 13ம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறதாம்.

    English summary
    Fifty Shades of Grey is an upcoming American film directed by Sam Taylor-Wood with a screenplay by Kelly Marcel, Patrick Marber and Mark Bomback, based on the best-selling novel of the same name by E. L. James. It is set to be released on February 13, 2015.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X