'ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே' படத்தின் ட்ரெய்லரே இப்படின்னா அப்போ மெயின் பிக்சர்?
நியூயார்க்: தன் படத்தை தனது பெற்றோர் பார்க்கக் கூடாது என்று விரும்புகிறார் ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தின் நாயகி டகோட்டா ஜான்சன்.
இ.எல். ஜேம்ஸ் எழுதிய ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே என்ற பாலுணர்வை தூண்டும் நாவல் அதே பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஹாலிவுட் படத்தில் கிறிஸ்டியன் கிரேயாக ஜேமி டார்னனும், அனஸ்தேசியா ஸ்டீலாக டகோட்டா ஜான்சனும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

ஹாலிவுட்
ஹாலிவுட் படங்களில் லிப் டூ லிப்பும், படுக்கையறை காட்சிகளும் புதிதல்ல. ஆனால் ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தில் முக்கால் வாசி நேரம் இது போன்ற காட்சிகள் தான் இருக்கும்.

ட்ரெய்லரே
ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தின் ட்ரெய்லரே சூட்டை கிளப்பும்படி உள்ளது. படம் எப்படி இருக்கமோ, அட சீக்கிரமா ரிலீஸ் பண்ணுங்கப்பா என்பதே ட்ரெய்லரை பார்த்தவர்களின் எண்ணம்.

காதலர் தினம்
ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படம் 20105ம் ஆண்டு காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அப்போ அவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டுமா என்பதே ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது.

காதல்
ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தில் அதிகபட்ச காமத்தையும் தாண்டிய அசைக்க முடியாத காதலும் உள்ளது.

டகோட்டா
படம் முழுவதும் படுக்கையறை காட்சிகள் இருப்பதால் இதை தனது பெற்றோர் பார்க்கக் கூடாது என்று விரும்புகிறார் டகோட்டா ஜான்சன்.

ட்விட்டர்
ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே ட்ரெய்லர் வெளியிடப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் அதை பற்றி தான் ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கின்றனர். படம் பற்றி நிமிடத்திற்கு 828 ட்வீட்கள் செய்யப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

நிச்சயம் ஹிட்
ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே நிச்சயம் பாக்ஸ் ஆபீஸை கதற வைக்கும் அளவுக்கு ஹிட்டாகப் போகிறது என்று பலர் தற்போதே கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











