'ஹாட்'டான "ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே" டிரெய்லர்... டிவியில் காட்ட முடியாமல் தவிப்பு!

By Sudha

ஒரு வழியாக நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. உலகப் பெண்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், கிளுகிளுப்பையும் ஏற்படுத்திய ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நாவலின் திரைப்படமாக்கம் முடிந்து இதோ டிரெய்லரும் வெளியாகி விட்டது.

ஆனால் இது அனைவரும் பார்க்கும் வகையில் இல்லை என்றும் சூடான காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளதாகவும், டிவியில் காட்ட முடியாது என்றும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்பிசி டிவியில் மட்டுமே இதைக் காட்டி வருகின்றனர். அதையும் எடிட் செய்து.

சில நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில் படத்தின் சில முக்கிய அம்சங்களை காட்டியுள்ளனர். புத்தகப் பிரியர்களின் திருப்தியை பூர்த்தி செய்வதாக இருந்தாலும் கூட அனைவருடனும் அமர்ந்து இதைப் பார்க்க முடியாதே என்றும் சலசலப்பு எழுந்துள்ளது.

ஜேம்ஸ்

ஜேம்ஸ்

இங்கிலாந்து பெண் எழுத்தாளர் இஎல் ஜேம்ஸ் எழுதிய நாவல்தான் ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே. அந்த நூலைத் தழுவித்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஜேமி டோர்னான் - டகோடா ஜான்சஜன்

ஜேமி டோர்னான் - டகோடா ஜான்சஜன்

இப்படத்தில் நாயகனாக அதாவது கிறிஸ்டியன் கிரே பாத்திரத்தில் ஜேமியும், நாயகி அனஸ்தாசியா ஸ்டீல் பாத்திரத்தில் டகோடா ஜான்சனும் நடித்துள்ளனர்.

காதலர் தினத்தன்று

காதலர் தினத்தன்று

அடுத்த ஆண்டு காதலர் தினத்திற்கு முதல் நாளில் அதாவது பிப்ரவரி 13ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

ஹாட் டிரெய்லர்

ஹாட் டிரெய்லர்

இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இதை டிவியில் அப்படியே காட்ட முடியாது என்று கருத்து எழுந்துள்ளது. காரணம், அதில் இடம் பெற்றுள்ள சில சூடான காட்சிகள்.

என்பிசியில் மட்டும்

என்பிசியில் மட்டும்

என்பிசி டிவியில் மட்டும் தற்போது இதைக் காட்டுகிறார்கள். அதுவும் கூட எடிட் செய்த காட்சிகளை மட்டுமே. இருந்தாலும் ஆன்லைனில் எடிட் செய்யப்படாமல் அப்படியே காட்சிகள் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X