Final Destination: ஃபைனல் டெஸ்டினேஷன் ப்ளட்லைன்ஸ் படம் எப்படி இருக்கு?.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: ஜாக் லிப்போஸ்கி, ஆடம் ஸ்டெய்ன் இயக்கத்தில் வெளியாகி உள்ள Final Destination Blood Lines திரைப்படம் ரசிகர்களை பயமுறுத்தியதா? இல்லையா? என்பது குறித்து ப்ளூ சட்டை மாறன் அளித்துள்ள விமர்சனம் தீயாக பரவி வருகிறது. ஃபைனல் டெஸ்டினேஷன் படங்கள் என்றாலே படத்தின் லீடு ரோலில் நடித்த நபருக்கு வரும் கனவுகள் அப்படியே நிஜத்தில் நடப்பது தான்.

கொடூரமான முறையில் பலரும் கொல்லப்படும் காட்சிகளை பார்த்தாலே அல்லு விட்டுவிடும். முதல் மூன்று பாகங்கள் மிரட்டிய அளவுக்கு அடுத்தடுத்த பாகங்கள் ரசிகர்களை கவரவில்லை. 13 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 6வது பாகமாக ஃபைனல் டெஸ்டினேஷன் ப்ளட்லைன்ஸ் படம் வெளியாகி இருக்கிறது.

Final Destination Bloodlines Review by Blue Sattai Maran

இந்த படம் எந்தளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்பது குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார். வழக்கமாக புதிய படங்களுக்கே நெகட்டிவ் விமர்சனம் கொடுத்து துவைத்து தொங்கப்போடும் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வாரம் ஏகப்பட்ட படங்கள்: தமிழில் சூரியின் மாமன், சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் என இரு பெரிய படங்கள் இந்த வாரம் வெளியாகி உள்ளன. அதே அளவுக்கு ஹாலிவுட்டிலும் இந்த வாரம் செம போட்டி உருவாகியிருக்கிறது. டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் இம்பாசிபிள் ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் மே 17ம் தேதியான நாளை வெளியாகும் நிலையில், இன்று ஃபைனல் டெஸ்டினேஷன் படம் வெளியாகி இருக்கிறது. அதன் பிரத்யேக காட்சியை பார்த்துவிட்டு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் கொடுத்துள்ளார்.

Take a Poll

ஃபைனல் டெஸ்டினேஷன் விமர்சனம்: மற்ற பாகங்களை போலவே படத்தில் லீடு ரோலாக இருக்கும் ஒருவருக்கு கெட்ட கனவு வருகிறது. அதுகுறித்து தனது பாட்டியிடம் அவர் சொல்ல, இது கனவு அல்ல உண்மையில் நடந்த நிகழ்வுகள் தான் என்றும் அப்படியொரு மரணத்தை தான் தடுத்துவிட்டதாகவும் ஆனால், அது துரத்திக் கொண்டிருக்கிறது என்றும் என்னையும் என்னுடைய வம்சத்தையும் அது அழிக்கும் என்கிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பது தான் இந்த ஃபைனல் டெஸ்டினேஷன் படத்தின் கதை என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.

மரக்கட்டை ஏற்றிச்செல்லும் லாரியை பார்த்தாலே பயம்: சிறு வயதில் ஃபைனல் டெஸ்டினேஷன் படங்களை பார்த்துவிட்டு மரக்கட்டை ஏற்றிச் செல்லும் லாரியை பார்த்தாலே அந்த படத்தின் ஞாபகம் வந்து லாரிக்கு பின்னால் செல்வதை தவிர்த்துவிடுவோம். அந்த அளவுக்கு அந்த படம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த படத்தின் கதை புதிதாக இல்லை என்றாலும், வித்தியாசமான முறைகளில் நடைபெறும் கொலைகள் எல்லாம் நம்மை திகிலடையச் செய்கிறது என படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

தூக்கம் வரல: சமீப காலமாக சில படங்களை பார்த்தாலே கொட்டாவி விட்டு தியேட்டரில் தூங்கி விடுகிறோம். அது போல இல்லாமல் கடைசி வரை போர் அடிக்காமல் பார்க்க வைக்கிறது. உங்களுக்கு ஃபைனல் டெஸ்டினேஷன் படங்கள் பிடிக்குமென்றால் இந்த வாரம் போய் பாருங்க எனக் கூறியுள்ளார். படத்தின் பின்னணி இசையும் அட்டகாசமாக உள்ளதாக விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X