twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாவ்.. பேண்டோராவை தாண்டி நிறைய விசயம் இருக்கா.. அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் அவதார்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகையே வியக்க வைத்த அவதார் படத்தின் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. அதன் புதிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உலகளவில் வைரலாகி வருகிறது.

    ஜேம்ஸ் கேமரூன் எனும் சினிமா விஞ்ஞானி 2009ம் ஆண்டு படைத்த அவதார் படம் உலகளவில் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.

    2019ம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் பல முயற்சிகளுக்கு பிறகே அவதார் சாதனையை முறியடித்தது.

     வேற லெவல் சார்... யோகிபாபுவுடன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் 'தர்பார்' செல்பி வேற லெவல் சார்... யோகிபாபுவுடன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் 'தர்பார்' செல்பி

    ஏன் இவ்வளவு லேட்?

    ஏன் இவ்வளவு லேட்?

    2009ம் ஆண்டில் அவதார் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதன் இரண்டாம் பாகம் 2013ம் ஆண்டிலும், மூன்றாம் பாகம் 2015ம் ஆண்டிலும் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். ஆனால், பல டெக்னிக்கல் சிக்கல்களால் அவதார் 2 படம் வெளியாக இவ்வளவு கால தாமதம் ஆகி வருகிறதாம்.

    2500 ஏக்கரில் செட்

    2500 ஏக்கரில் செட்

    நியூசிலாந்தில் அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க 2500 ஏக்கரை விலைக்கு வாங்கிய ஜேம்ஸ் கேமரூன் பிரம்மாண்ட செட்கள் அமைத்து அடுத்தடுத்த பாகங்களை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.

    எத்தனை பாகங்கள்?

    எத்தனை பாகங்கள்?

    அவதார் படம் மொத்தம் 5 பாகங்களாக வெளிவர உள்ளன. அவதார் படத்தின் 2ம் பாகம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில், அவதார் படத்தின் 5ம் பாகம் 2027-ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவதார் தீம் மெர்சிடஸ் பென்ஸ்

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் செஸ் 2020 தொழில்நுட்ப மாநாட்டில் திங்களன்று அவதார் பட தீமில் உருவான மெர்சிடஸ் பென்ஸ் காரை ஜேம்ஸ் கேமரூன் முன்னிலையில் அறிமுகப்படுத்தினர்.

    புதிய புகைப்படங்கள்

    புதிய புகைப்படங்கள்

    அந்த நிகழ்வில் அவதார் படத்தின் புதிய புகைப்படங்கள் அடங்கிய கான்செப்ட் ஆர்ட் புகைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. அதனை தற்போது அவதார் படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.

    பேண்டோராவை தாண்டி

    அவதார் படத்தில் பூமியில் இருந்து பேண்டோரா எனும் வேற்று கிரகத்துக்கு மனிதர்கள் விண்கலம் ஏறி செல்வார்கள். பேண்டோராவின் அழகை தனித்துவமாக படம்பிடித்து உலகிற்கு வியப்புடன் கலந்த பிரம்மாண்ட படைப்பை ஜேம்ஸ் கேமரூன் காட்டியிருந்தார். அவதார் 2 மற்றும் அடுத்தடுத்த பாகங்களில் பேண்டோராவை தாண்டிய பல புதிய உலகங்களை உலக ரசிகர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் காட்டவுள்ளாராம்.

    புதிய மிருகங்கள்

    அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் நிலத்தை விடுத்து நீரை மையமாகக் கொண்டு நகரும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தன. ஆமையா? அல்லது டைனோசரா என்று தெரியாத அளவுக்கு புதிய வகை மிருகங்கள் அவதார் 2ம் பாகத்தில் வரப்போவதை தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் உணர்த்துகின்றன.

    அவதாரும் தப்பவில்லை

    அவதாரும் தப்பவில்லை

    சமீப காலமாக எல்லாத்தையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில், பத்து ஆண்டுகள் கழித்து வெளியாகவுள்ள அவதார் படமும் ட்ரோல்களில் இருந்து தப்பவில்லை. அவதார் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் அதனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

    ஒருவழியா ஒரு அப்டேட்

    நீண்ட நாட்களாக அவதார் படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒருவழியா ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளனர் என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

    English summary
    Cameron is planning not one, not two, but four Avatar sequels. Avatar 2 is (obviously) the first of these, and is slated for a December 2021 release date. Avatar 5 is planned to end the series in 2027.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X