உலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக.. ஜேம்ஸ்பாண்ட் ஆகும் பிரபல இளம் நடிகை.. வைரலாகும் போட்டோ!
பெண் ஜேம்ஸ் பாண்ட் வேடத்திற்கு பிரபல ஹாலிவுட் நடிகை லஷானா லிஞ்ச் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நியூயார்க்: ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண் நடிகையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் திரைப்படங்களின் கதாபாத்திரங்களில் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது ஜேம்ஸ் பாண்ட் 007. இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை ஹாலிவுட் ஹீரோக்கள் மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறார்கள்.
தற்போது ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரேய்க். இவர் தனது கடைசி ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'நோ டைம் டு டை' என பெயர் வைத்துள்ளனர்.

படப்பிடிப்பு
'நோ டைம் டு டை' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படம் அடுத்த வருடம் ஏப்ரம் 3ஆம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8ம் தேதி அமெரிக்காவிலும் வெளியாகவுள்ளது. இந்தியாவிலும் அதே சமயம் தான் வெளியாகிறது.

பெண் ஜேம்ஸ் பாண்ட்
இந்நிலையில் டேனியல் கிரேய்குக்கு அடுத்தது ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க போவது யார் என்பது மர்மமாகவே இருந்தது. இனி பெண் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் தான் திரைப்படமாகும் என கூறப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல என்ற கருத்தும் பரவியது.

லஷானா லிஞ்ச்
இந்நிலையில் 'நோ டைம் டு டை' படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் நடிகை லஷானா லிஞ்ச், லெதர் ஜாக்கெட் அணிந்தபடி இடுப்பில் துப்பாக்கியுடன் நிற்கிறார். அவர் தான் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் என கூறப்படுகிறது.

அசத்தல் நடிப்பு
கேப்டன் மார்வெல் படத்தில் மரியா ராம்பியூ எனும் கதாபாத்திரத்தில் லஷான லிஞ்ச் நடித்திருத்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு அசத்தலாக இருந்ததால், பெண் ஜேம்ஸ் பாண்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு பெண்ணை ஒப்பந்தம் செய்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











