ஹாலிவுட் நடிகரை பிச்சைக்காரன் என்று நினைத்து பீட்சா கொடுத்த பெண்

By Siva

நியூயார்க்: ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கியரை பிச்சைக்காரன் என்று நினைத்து பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் அவருக்கு பீட்சா கொடுத்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கியர் அதாங்க மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது நடிகை ஷில்பா ஷெட்டியை வளைத்து பிடித்து முத்தமிட்டாரே அதே நடிகர் தான். அவர் டைம் அவுட் ஆஃப் மைன்ட் என்ற ஆங்கில படத்திற்காக பிச்சைக்காரன் போன்று உடை அணிந்து அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் மான்ஹாட்டனில் இருக்கும் கிராண்ட் சென்ட்ரல் அருகே இருக்கும் பீட்சா கடைக்கு வெளியே குப்பையை கிளறும் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார்.

French tourist in New York mistakes Richard Gere for beggar, gives him pizza

அப்போது பீட்சா கடையில் இருந்து தனது 15 வயது மகனுடன் வெளியே வந்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணியான கரீன் வால்னைஸ் கியரை பார்த்ததும் அவர் பிச்சைக்காரர் என்று நினைத்து தான் பையில் வைத்திருந்த பீட்சாவை எடுத்து அவருக்கு கொடுத்துவிட்டு சென்றார்.

கியரும் அதை வாங்கிக் கொண்டு அந்த பெண்ணுக்கு நன்றி தெரிவித்தார். இந்த புகைப்படம் செய்தித்தாள்களில் வெளிவந்த பிறகே தான் பிச்சை அளித்தது படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் கியர் என்பது கரீனுக்கு தெரிய வந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X