டிராப் சிட்டி படம் மூலம் ஹாலிவுட்டில் நுழையும் ஜி.வி. பிரகாஷ் குமார்

சென்னை: பாலிவுட் இயக்குநர் ரிக்கி ப்ரூச்சல் இயக்கவுள்ள ஹாலிவுட் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ட்ராப் சிட்டி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராண்டன் டி.ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் முன்னர் ட்ராஃபிக் தண்டர், பெர்சி ஜாக்சன் போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமா நடிகர்களில் அடுத்ததாக நடிகர் ஜி.வி.பிரகாஷும் ட்ராப் சிட்டி திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நுழைகிறார். நடிகர் நெப்போலியனை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய கே.ஒய்.பி.ஏ ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் டெல் கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார்.

தமிழ் திரையுலகில் வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் பென்சில் என்ற திரைப்படம் மூலம் நடிப்பில் முதல் அடி எடுத்து வைத்தார்.

G.V.Prakash Kumar Enter into a Hollywood Cinema

அதன் பிறகு இவர் வரிசையாக பல பிரபல இயக்குநர்களுடன் பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், பாலிவுட் இயக்குநர் ரிக்கி ப்ரூச்சல் இயக்கவுள்ள ஹாலிவுட் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ட்ராப் சிட்டி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராண்டன் டி.ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் முன்னர் ட்ராஃபிக் தண்டர், பெர்சி ஜாக்சன் போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

முன்னதாக டெவில் நைட் என்னும் ஹாலிவுட் படத்தில் தமிழ் நடிகர் நெப்போலியனை அறிமுகப்படுத்திய கே.ஒய்.பி.ஏ ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் டெல் கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார். திரைப்படம் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக 100% கதால், அடங்காதே மற்றும் இயக்குனர் வசந்த பாலனின் ஜெயில் போன்ற படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார். தற்போது பேச்சுலர், ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடிகராகவும் காதலிக்க யாருமில்லை படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் அசுரன் திரைப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி சூர்யா கதாநாயகனாக நடிக்கும் சூரரை போற்று திரைப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் நடித்த தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃபி ஃபகிர் திரைப்படத்திற்கு பிறகு, ஜி.வி.பிரகாஷ் ஹாலிவுட் திரைப்படமான ட்ராப் சிட்டியில் களமிறங்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X