பைக் ஓட்டியபோது மாரடைப்பு: பிரபல நடிகர் மரணம்

By Siva

வான்கூவர்: பிரபல ஹாலிவுட் நடிகர் கேப்ரியல் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

ஒன்ஸ் அபான் எ டைம் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் கனடாவை சேர்ந்த கேப்(கேப்ரியல்) கூத். டிம் பர்டனின் பிக் ஐஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் அனிமேஷன் தொடர்களுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார்.

Gabe Kouth dies in an accident

அவர் கடந்த 23ம் தேதி மதியம் 1.30 மணி அளவில் போர்ட் மூடியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வாகனம் ஓட்டியபோது கேப்ரியலுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாகனம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கேப்ரியலை மீட்ட போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

எப்பொழுதும் அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் கேப்ரியல் இறந்த செய்தியை அவரின் நண்பரும், சக நடிகருமான பீட்டர் கெலாமிஸ் ட்விட்டரில் தெரிவித்தார்.

46 வயதெல்லாம் போகும் வயதா கேப்ரியல், ஏன் இந்த அவசரம் என்று திரையுலக பிரபலங்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தங்களின் ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X