என் பிள்ளைகள் 'கே கே'ன்னு வளரணும்- லேடி ககா!

25 வயதாகும் லேடி ககா மிகவும் பாப்புரலான பாப் பாடகிகளில் ஒருவர். கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட வலம் வரும் லேடி ககா சர்ச்சைகளில் சிக்குவதும் சர்ச்சையாக பேசுவதிலும் வல்லவர்.
அந்த வகையில் இப்போது ஒரு சர்ச்சையான பேச்சைப் பேசியுள்ளார். லேடி ககாவின் பெயரில் ககா கூகூ என்ற பெயரில் குழந்தைகள் ஆடை உருவாக்கப்பட்டுள்ளது. இதை வெளியிட்டார் ககா. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், எனக்குப் பிறக்கும் குழந்தைகள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாற விரும்பினால், மாறினால் அதை நான் வரவேற்பேன், மகிழ்ச்சியுடன் ஏற்பேன்.
அதேசமயம், அவர்கள் ஓரினச்சேர்க்கையை வெறுத்தால், நான் அவர்களை வெறுப்பேன்.
எனக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்பது தெரியாது. இருப்பினும் எனது மார்க்கெட் சற்றே ஓய்வடையும் போது குழந்தைகள் குறித்து நான் சிந்திப்பேன் என்றார் ககா.
ககாவின் பேச்சு சர்ச்சையையும், சூடான விவாதத்தையும் கிளப்பி விட்டுள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்தவர் ககா. ரோம் நகரில் நடந்த ஐரோப்பிய ஓரினச்சேர்க்கையாளர்கள் உரி்மை பேரணியிலும் கலந்து கொண்டு ஆதரவைத் தெரிவித்தவர் ககா என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











