மிரட்ட வரும் கேல் கடோட்… ‘ஒண்டர் உமன் 1984’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கேல் கடோட் நடிப்பில் உருவாகி வரும் ஒண்டர் உமன் 2ம் பாகம் அடுத்த ஆண்டு ஜூன் 5ம் தேதி வெளியாகிறது. வரும் டிசம்பர் மாதம் அந்த படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியாகிறது.
நியூயார்க்: 2017ம் ஆண்டு வெளியான ஒண்டர் உமன் டிசி காமிக்ஸுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது.
ஒண்டர் உமன் 1984 எனும் தலைப்பில் அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
அந்த படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தல – தளபதி
நம்மூரில் தல - தளபதி ரசிகர்கள் யுத்தம் எப்போதும் ஏற்படுவது போல, ஹாலிவுட்டில் மார்வெல் மற்றும் டிசி படங்களுக்காக இணையத்தில் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம். அவெஞ்சர்ஸ் படங்களினால் மார்வெலின் கை ஓங்கிய போது, டிசி ரசிகர்களுக்கு ஒண்டர் உமன், ஆக்வாமேன் போன்ற படங்கள் பெருமளவில் உற்சாகத்தை கொடுத்தன.

முதல் பாகம்
பேட்டி ஜென்கின்ஸ் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ஒண்டர் உமன் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. இந்த படத்தில் ஒண்டர் உமனாக நடித்த கேல் கடோட்டுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகினர். கேல் கடோட்டை மீண்டும் ஒண்டர் உமன் கதாபாத்திரத்தில் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

என்ன கதை
கேல் கடோட், க்ரிஸ் பைன், க்ரிஸ்டன் விக் மற்றும் பெட்ரோ பாஸ்கல் நடிப்பில் உருவாகி வரும் ஒண்டர் உமன் இரண்டாம் பாகம் ஒண்டர் உமன் 1984 என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. 1984ம் ஆண்டு கால கட்டத்தில் நடந்த ஒரு மாபெரும் போரில் ஒண்டர் உமன் செய்யும் சாகசங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறதாம்.

எப்போ ரிலீஸ்
ஒண்டர் உமன் 1984 திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதிலும் ரிலீஸ் ஆகவுள்ளது. அந்த படத்தின் டிரைலர் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது. ஆண்டுதோறும் பிரேசிலில் உள்ள சான் டிகோவில் டிசம்பர் மாதம் நடைபெறும் காமிக் கான் நிகழ்ச்சியில் ஒண்டர் உமன் 1984 படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











