வக்கீல் காதலியை மணந்தார் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி
வெனிஸ்: ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி இங்கிலாந்தை சேர்ந்த வழக்கறிஞர் அமல் அலாமுத்தீனை வெனிஸில் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி(53) கடந்த 1989ம் ஆண்டு டாலியா பால்சம் என்பவரை திருமணம் செய்தார். 1993ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
அதன் பிறகு க்ளூனி வாழ்வில் பல காதலிகள் வந்தனர், சென்றனர். ஆனால் யாரையும் அவர் திருமணம் செய்யவில்லை.

அமல்
இத்தனை ஆண்டுகளாக மறுதிருமணம் செய்யாத க்ளூனிக்கு இங்கிலாந்தை சேர்ந்த வழக்கறிஞர் அமல் அலாமுத்தீனை(36) தான் திருமணம் செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்கிறது.

வெனிஸ்
இத்தாலியில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் க்ளூனி, அமல் திருமணம் வரும் திங்கிட்கிழமை நடைபெறும் என்று கூறப்பட்டது.

திருமணம்
திருமணம் திங்கட்கிழமை என்று கூறப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவே க்ளூனியின் திருமணம் வெனிஸில் ரகசியமாக நடந்துள்ளது.

மேட் டாமன்
வெனிஸில் உள்ள சொகுசு ஹோட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர்கள் மேட் டாமன், ஜான் க்ரசின்ஸ்கி உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











