»   »  என் மனைவி என்னை டிவியே பார்க்க விடுவது இல்லை.. சொல்கிறார் ஹாலிவுட் "அஜீத்"!

என் மனைவி என்னை டிவியே பார்க்க விடுவது இல்லை.. சொல்கிறார் ஹாலிவுட் "அஜீத்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: தனது மனைவி அமல் அலாமுத்தீன் தன்னை டிவியில் ஸ்போர்ட்ஸ் சேனலை பார்க்க விடுவது இல்லை என்று ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி தெரிவித்துள்ளார்.

54 வயதாகும் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி 1989ம் ஆண்டு நடிகை தாலியா பால்சமை திருமணம் செய்து பின்னர் 1993ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதில் இருந்து அவர் பல காதலிகளுடன் உலா வந்தாரே தவிர யாரையும் திருமணம் செய்யவில்லை.

க்ளூனிக்கு திருமணம் செய்யும் என்னமே இல்லையா என்று பலரும் வியந்தனர்.

அமல் அலாமுத்தீன்

அமல் அலாமுத்தீன்

காதலிகளுடன் ஜாலியாக இருந்து வந்த க்ளூனி இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞர் அமல் அலாமுத்தீனை பார்த்து காதலில் விழுந்தார். இதையடுத்து அவர்கள் கடந்த ஆண்டு வெனிஸில் திருமணம் செய்து கொண்டனர்.

அழகு

அழகு

தனது மனைவி அழகோ அழகு என்று புகழ்ந்து தள்ளுகிறார் ஜார்ஜ் க்ளூனி. என் மனைவி என்ன அழகு, என்ன ஸ்டைலு, என்ன அறிவு அடடா நான் கொடுத்து வைத்தவன் என்று நெகிழ்கிறார் க்ளூனி.

இவர் தான்

இவர் தான்

அறிவாளியான அமலை பார்த்தவுடன் முதலில் அச்சுறுத்தலாக இருந்தது. அதே சமயம் இவர் தான் நம் வாழ்க்கை துணை என்று எனக்கு தோன்றியது. அவரிடம் என் விருப்பத்தை தெரிவித்ததும் அவரும் சம்மதம் தெரிவித்தார் என்கிறார் ஜார்ஜ் க்ளூனி.

டிவி

டிவி

நாங்கள் வீட்டில் இருக்கையில் டிவி ரியாலிட்டி ஷோக்களை அவ்வளவாக பார்க்க மாட்டோம். அவர் தற்போது என்னை டிவியை ஆஃப் செய்ய வைத்துவிட்டு பாட்டு கேட்பது இல்லை வேறு ஏதாவது செய்யலாம் என்கிறார். டிவியில் ஸ்போர்ட்ஸை பார்க்க விடுவது இல்லை என்று மனைவி பற்றி க்ளூனி தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர்

வழக்கறிஞர்

அமல் வழக்கறிஞர் உடையை அணிந்து வாதாடுவதை பார்க்கையில் பெருமையாக உள்ளது என்கிறார் க்ளூனி. விக்கீலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் சர்பில் ஆஜரானவர் அமல். மேலும் ஐ.நா. அதிகாரி கோபி ஆனானுக்கு சிரியா விவகாரத்தில் ஆலோசகராக உள்ளார் அமல்.

English summary
Nearly nine months after his marriage, actor George Clooney still seems to be in the honeymoon phase with his wife Amal Alamuddin. Speaking of their home life, the actor said: “We don’t watch a lot of reality TV, that’s not knocking it. ­She makes me turn the TV off now and suggests we play music or ­something else but not watch sport.”

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil