twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரெசிடெண்ட் ஈவில் 5: ஹாலிவுட் ஆக்ஷன் விருந்துக்கு ரெடியாகுங்க!

    By Shankar
    |

    Resident Evil
    பல பாகங்கள் வந்து வெற்றி பெற்ற படங்களில் 'ரெசிடெண்ட் ஈவில்' படத்துக்குச் சிறப்பிடம் உண்டு. அறிவியலும் ஆக்ஷனும் கலந்த அதிரடிப்பட வரிசையில் இப்படம் புகழ் பெற்றதாகும்.

    இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகி வெற்றியில் ஒன்றை ஒன்று மிஞ்சியுள்ளதை ஹாலிவுட் பட ரசிகர்கள் நன்கு அறிவர்.

    இப்போது ஐந்தாம் பாகமாக வெளிவரவுள்ளது 'ரெசிடெண்ட் ஈவில் - ரீட்ரிபூஷன்'. இதை எழுதி இயக்கியிருப்பவர் பால். டபிள்யூ. எஸ்.ஆண்டர்சன். இது வீடியோ கேம்ஸ் சீரிஸ் அடிப்படையில் கதை பின்னப்பட்டதாகும். புதிய படத்தில் இதற்கு முந்தைய படங்களில் இடம் பெற்ற கதாபாத்திரங்களும் உண்டு. புதிதாகச் சில பாத்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மில்லா ஜாவோ விச், சீன்னா கிளாரி.ஜோஹன் அர்ப்.லி பிங்பிங், ஷன் ராபர்ட்ஸ்,கெவின் டுராண்ட்... போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    கதை எழுதி இயக்கியுள்ளவர்.பால்.டபிள்யூ.எஸ்.ஆண்டர்சன். இவர் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கூட. இசை - டாமன்மேன்டி இசைக்குழு, ஒளிப்பதிவு -க்ளன் மேக் பெர்சன்.

    இப்படத்துக்கு 2011 அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. டிசம்பரில் முடிந்தது. பக்கா திட்டமிடல். தொடங்கப்பட்ட அன்றே வெளியிடும் தேதியும் குறிக்கப்படுவது ஹாலிவுட் மரபு. அதன்படியே அன்று அறிவிக்கப்பட்டபடி 2012 செப்டம்பர் 14ல் வெளியாகிறது இந்தப் படம்.

    இந்தப்படம் ஐநாக்ஸ் 3டியில் மட்டுமல்ல, 2டியிலும் வெளியாகிறது.

    அம்பரல்லா கார்ப்பரேஷன் பல மர்மங்கள் நிறைந்த அமைப்பு. ஆலிஸூக்கும் அதற்கும் என்ன தொடர்பு ? பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்க ஆலிஸ் முயல்கிறாள். ஒரு கட்டத்தில் தான் யார் என்கிற மர்ம முடிச்சுக்கும் விடை கிடைக்கிறது. அம்பரல்லா கார்ப்பரேஷன் என்ன செய்கிறது என்கிற கேள்விக்கும் விடை கிடைக்கிறது.

    மர்மங்கள், அதிரடி அக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக படம் உருவாகியுள்ளது. அலிஸாக மில்லா நடித்திருக்கிறார்.

    டோக்கியோ, நியூயார்க், லண்டன் ஆகிய இடங்களில் கதை நிகழ்வதாகக் காட்டப்படுகிறது. அதாவது ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க கண்டங்கள்தான் கதைப் பின்னணி. பொதுவாக ஹாலிவுட் படங்கள் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து,ஆஸ்திரேலியா, சீனா என எதாவது ஒரு நாட்டில் நடப்பதாகவே இருக்கும். இது மூன்று கண்டங்களில் நிகழும் உலகளாவிய படமாக இருக்கும்.

    ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட புகழ் பெற்ற ஆக்ஷன் - சயின்ஸ் பிக்ஷங்களின் செல்வாக்கு இப்படத்தில் உண்டு. அவற்றையெல்லாம் தாண்டிய பிரமாண்ட முயற்சிகளும் உண்டு.

    படத்தில் இடம் பெரும் சண்டைக் காட்சிகள் ஆசிய சினிமாவின் தாக்கத்தில் இருக்கும் என்கிறார்கள். தாய்லாந்து படங்களில் ஆக்ஷன் பாதிப்பும் இருக்குமாம். ஆக்ஷன் காட்சிகளில் '3டி' தொழில் நுட்பம் மயிர்க்கூச்செரிய வைக்கும் என்கிறார்கள்.

    மொத்தம் 44 நாட்களில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. டோரன்டோவிலுள்ள சினிஸ்பேஸ் கிப்ளிங் ஸ்டுடியோ, நியூயாக்கிலுள்ள டைம்ஸ் கொயர், மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கம் போன்ற புகழ் பெற்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இது, ரெசிடெண்ட் ஈவில் தொடரில் 3டி பயன்படுத்தப்படும் இரண்டாவது படமாகும். ரெட் எபிக் கேமெரா பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இப்படம் உலகெங்கும் செப்டம்பர் 14ல் வெளியாகிறது. ஸ்க்ரீன் ஜெம்ஸ் விநியோகிக்கிறது. இந்தியாவில் சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

    தமிழ் உள்பட மற்ற இந்திய மொழிகளிலும் 'ரெசிரெண்ட் ஈவில்- ரீட்ரிபூஷன்' வெளியாகிறது. ஒரு புதிய ஆக்ஷன் அனுபவத்துக்கு தயாராகுங்கள்!

    English summary
    The fifth part of Hollywood magnum opus Resident Evil series, Resident Evil Retribution will be hit the screens soon in Tamil with 3 D effect.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X