Gladiator 2: பிரம்மாண்ட போர் காட்சிகளுடன் உருவாகியுள்ள கிளாடியேட்டர் 2.. டிரைலரே இப்படி மிரட்டுதே!

லாஸ் ஏஞ்சல்ஸ்: இயக்குநர் ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரஸல் க்ரோவ் நடிப்பில் வெளியான 'கிளாடியேட்டர்' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சமீப காலமாக ஹாலிவுட் படங்கள் டல் அடித்து வரும் நிலையில், புதிதாக கதைகள் கிடைக்காமல் பார்ட் 2 கலாசாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

அவதார் 2 திரைப்படம் வெளியான நிலையில், அடுத்ததாக கிளாடியேட்டர் 2 படத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளனர். கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான கிளாடியேட்டர் திரைப்படம் உலகமெங்கும் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது.

https tamil filmibeat com news blue-sattai-maran-trolls-sarathkumar-150-years-and-jaguar-thangam-200-years-living-speech-137309 html

மேலும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட 5 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை அள்ளியது.

கிளாடியேட்டர் 2: கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிளாடியேட்டர்' படத்தின் இரண்டாம் பாகத்தை ரிட்லி ஸ்காட் உருவாக்கியுள்ளார். டிரைலரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியும் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாகவும் பிரம்மிப்பாகவும் உள்ளன. அப்போது இருந்த சிஜி காட்சிகளுக்கும் ஹாலிவுட் தற்போது வளர்ந்திருக்கும் லெவலுக்கும் ஏற்ப பெரிய பட்ஜெட்டில் கிளாடியேட்டர் 2ம் பாகத்தை உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க தயாராகி விட்டனர்.

https tamil filmibeat com news blue-sattai-maran-trolls-sarathkumar-150-years-and-jaguar-thangam-200-years-living-speech-137309 html

டிரைலர் தெறிக்குது: கிளாடியேட்டர் முதல் பார்ட்டில் ரோம பேரரசர் மார்க்கஸ் ஆரேலியஸின் (ஜோக்கின் ஃபீனிக்ஸ்) பேரனாக வந்த சிறுவன் லூசியஸ் (பால் மெஸ்கல்), ரோம் நாட்டிலிருந்து தன்னுடைய தாயால் தொலைதூர நாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கு வாழ்ந்து வருகிறார். ஆனால் சூழல் அவரை மீண்டும் ரோமுக்கு ஒரு கிளாடியேட்டராக கொண்டு வருகிறது.

https tamil filmibeat com news blue-sattai-maran-trolls-sarathkumar-150-years-and-jaguar-thangam-200-years-living-speech-137309 html

எப்போ ரிலீஸ்?: இன்னொருபுறம் ரோமில் முந்தைய பாகத்தின் ஹீரோ மேக்ஸிமஸிடம் பயிற்சி பெற்ற மார்கஸ் அசாசியஸ் (பெட்ரோ பாஸ்கர்) இருக்கிறார். இருவரும் பிரம்மாண்ட கொலோஸியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றனர். இதுதவிர டிரைலரில் மிகப்பெரிய போர் காட்சியும் வருகிறது. பழிவாங்கல், அதிகாரத்துக்கான யுத்தம், ரத்தம், வன்முறை என செல்லும் கிளாடியேட்டர் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. இந்த இருவர் தவிர படத்தில் டென்ஸல் வாஷிங்டன், கானி நெல்சன், ஜோசப் குயின் உள்ளிட்டோரும் இருக்கின்றனர். கிளாடியேட்டர் 2 திரைப்படம் வரும் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X