மனோஜ் நைட் ஷியாமளனின் ”கிளாஸ்”.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 3 நிமிட திரில் டிரெய்லர்!
மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கியுள்ள கிளாஸ் திரைப்பட ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
நியூயார்க்: ஹாலிவுட் இயக்குனர் மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கியுள்ள "கிளாஸ்" திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
மனோஜ் நெல்லிட்டு ஷியாமளனின் அடுத்த படைப்புதான் "கிளாஸ்". இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று ஹாலிவுட் படங்கள் இயக்குவதால் அமெரிக்கர் என சொல்லிவிட முடியாது. நம்ம பாண்டிச்சேரியில் பிறந்து அமெரிக்காவில் செட்டில் ஆனவர் என்பதால் நம்ம ஊர் ஹாலிவுட் இயக்குனர் என உரிமை கொண்டாடலாம்.

2016 ஆம் ஆண்டு வெளியான ஸ்பிலிட் திரைப்படத்திற்கு பிறகு இவர் இயக்கி இருக்கும் திரைப்படம் "கிளாஸ்". இப்படத்தில் ஜேம்ஸ் மெக் அவாய், அன்யா டெய்லர், புரூஸ் வில்ஸ், ஸ்பென்சர் ட்ரீட் கிளார்க், சமுவேல் ஜாக்சன், சாரா பால்சன் மற்றும் சாரலைன் வுடட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இது ஈஸ்ட்ரயல் 177 ட்ரையாலஜி வரிசைப் படமாகும். ஷியாமளனின் "அன்பிரேக்கபில்" மற்றும் "ஸ்பிலிட்" படங்களின் கருவான ஈஸ்ட்ரயல் 177 ட்ரையாலஜியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுள்ளது.
உளவியல் ரீதியாக பாதிப்புக்கு ஆளான கதாபாத்திரங்கள் இருக்கும் ஒரு வகை ஹாரர் சீரீஸ் படங்களுக்கு ஈஸ்ட்ரையல் 177 ட்ரயாலஜி என்று பெயர். இந்த வகை படங்களில் வரக்கூடிய ஹாரர், கெட்ட கனவு, கொடூர விலங்கின் தாக்குதல், அமானுஷ்ய சக்திகள் என உளவியல் பிரச்சனைகளைக் கொடுக்கக் கூடியவை. அவற்றை முறியடித்து வெல்லக்கூடியதாக கதாநாயகன் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
தன்னைத்தானே சூப்பர் ஹீரோ என சொல்லிக்கொள்ளும் நபர்களைக் கையாளும் ஸ்பெஷலிஸ்ட் என்று சாரா பால்சன் தன்னை அறிமுக செய்வதிலிருந்து கிளாஸ் படத்தின் ட்ரெய்லர் துவங்குகிறது. அடுத்த காட்சியில், சாமுவேல் ஜாக்சன், ஜேம்ஸ் மெக் அவாய் மற்றும் புரூஸ் வில்ஸ் சிறையில் உள்ளனர். அதன்பிறகு நகரும் ஒவ்வொரு நொடியும் பதட்டம் தொற்றிக்கொள்வதாய் அமைந்துள்ளது.
மிகக் கொடுரமான பீஸ்ட் உள்பட23 மாறுபட்ட கதாபாத்திரங்கள் புதைந்திருக்கும் நபராக ஜேம்ஸ் மெக் அவாய் நடிக்கிறார். பல கொலைகள் செய்யக்கூடிய நபராக சாமுவேல் ஜாக்சன் நடித்துள்ளார். பல அதிசய சக்திகள் கொண்ட கெவின் டன்ன் என்ற கதாபாத்திரத்தில் புரூஸ் வில்ஸ் நடித்துள்ளார்.
மனோஜ் நைட் ஷாயமளான் இயக்கத்தில் வெஸ்ட் டையலான் தோர்ட்சன் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











