Michelle Trachtenberg: 39 வயது ஹாலிவுட் வில்லி நடிகை மரணம்.. கொலையா என சந்தேகிக்கும் காவல்துறை!

நியூயார்க்: ஹாலிவுட் சினிமா உலகில் வில்லத்தனம் நிறைந்த நடிப்பினை வெளிபடுத்தி வந்தவர் நடிகை மிஷேல் டிராக்டன்பெர்க். 39 வயதான இந்த நடிகை அவரது அப்பார்ட்மெண்ட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது நெருங்கிய நண்பர்களையும் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மரணம் இயற்கை மரணமா அல்லது கொலையா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மிஷேல் டிராக்டன்பெர்க் வில்லத்தனமான நடிப்புக்கு பெயர் பெற்றவர். குறிப்பாக காசிப் கேர்ள் என்ற படத்தில் ஜார்ஜினா ஸ்பார்க்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். அதேபோல் பஃபி தி வாம்பயர் படத்திலும் அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தினார். இதற்காக அவர் பல விருதுகளையும் வென்றுள்ளார். தனது 3 வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார் மிஷேல். அதாவது இவர், தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஃபீட் அண்ட் ஃபீட் என்ற படத்தில் இருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர், தொடர்ந்து 36 ஆண்டுகளாக நடித்து வந்தார். தனது 11 வயதிலேயே இவர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவுக்கு நடிப்பில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தார்.

Michelle Trachtenberg Michelle Trachtenberg Death Gossip Girl

சண்டை: சமீபத்தில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிர்ந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் " மிஷேல் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்" என கமெண்ட் அடித்தார். இதனைப் பார்த்த, மிஷேல், நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் என எதை வைத்து கூறுகிறீர்கள். அதை எனக்கு கொஞ்சம் விவரமாக கூறுங்கள். எனக்கு 38 வயது ஆகிறது, எனக்கு 14 வயது இல்லை. நீங்கள் இவ்வாறு பதிவிடுவது எனக்கு உண்மையிலேயே வருத்தமாக உள்ளது என பதிவிட்டிருந்தார். ரசிகர் உடனடியாக மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு, உடனே தனது மற்றொரு புகைப்படத்தை பகிர்ந்து, நான் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். இது மட்டும் இல்லாமல், நான் பிளாஸ்டிக் சர்ஜரி என எதுவும் செய்யவில்லை. என்னை வெறுப்பவர்கள் உங்களை நீங்களே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்" என பதிவிட்டிருந்தார்.

Michelle Trachtenberg Michelle Trachtenberg Death Gossip Girl

மரணம்: இப்படியான நிலையில் இவர் நியூயார்க்கில் உள்ள அப்பார்ட்மெண்ட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு காரணம் அதுதான் இருக்கும் என பலர் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது, காவல்துறை தரப்பில் இதனை ஏற்றுக் கொண்டாலும், நடிகையின் மரணத்திற்கு வேறு காரணங்கள் இருக்குமோ எனவும் அவரை யாராவது கொலை செய்துவிட்டார்களா எனவும் விசாரித்து வருகிறார்கள். இவரது மரணம் ஹாலிவுட் வட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X