தமிழ் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற கிரேவிட்டி!
இன்று 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய கிரேவிட்டி, சென்னை மற்றும் தமிழகத்தில் வசூலைக் குவித்த படமாகத் திகழ்கிறது.
இன்னும் சென்னை எஸ்கேப்பில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

10 பிரிவுகளில் பரிந்துரை
அல்போன்ஸோ கோரன் இயக்கத்தில் ஜார்ஜ் க்ளூனி, சான்ட்ரா புல்லக் நடித்த படம் கிரேவிட்டி. இந்தப் படத்தை 10 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைத்திருந்தனர்.

7 விருதுகள்
இவற்றில் 7 பிரிவுகளில் இந்தப் படம் விருதுகளை வென்றது. சிறந்த இயக்குநருக்கான விருதையும் இந்தப் படமே வென்றது.

சென்னையில் ப்ளாக்பஸ்டர்
சென்னையில் இந்தப் படம் ஆங்கிலத்தில் நேரடியாக வெளியானது. தமிழில் டப் செய்யப்படவில்லை. ஆனாலும் ரசிகர்கள் கூட்டம் இந்தப் படத்துக்கு அலைமோதியது.

ரூ 3.5 கோடி
தமிழகத்தில் மட்டும் இந்தப் படம் ரூ 3.5 கோடியை வசூலித்துள்ளது. இந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்த செய்தியால், மேலும் சில அரங்குகளில் படத்தைத் திரையிட முடிவு செய்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications