twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எதிர்ப்பு.. வாய்ப்புகளை திருடுவதாக சாடல்.. மூன்றாம் பாலினத்தவராக நடிக்கவில்லை என ஒதுங்கிய நடிகை!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதை வென்ற நடிகை ஹாலே பெர்ரி, மூன்றாம் பாலினத்தவராக தான் நடிக்கப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    கேட் உமன், எக்ஸ்மேன், ஜேம்ஸ் பாண்ட் படமான 'டை அனதர் டே' உள்ளிட்ட பல பிரபல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் நடிகை ஹாலே பெர்ரி.

    தனது அடுத்த படத்தில் மூன்றாம் பாலினத்தவராக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார்.

    அஜித் படம் பார்த்துவிட்டு ட்ரீட் கொடுத்த விஜய்.. 9 வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த இயக்குநர்!அஜித் படம் பார்த்துவிட்டு ட்ரீட் கொடுத்த விஜய்.. 9 வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த இயக்குநர்!

    பறிபோகும் வாய்ப்பு

    பறிபோகும் வாய்ப்பு

    கருப்பு நிறத்தவர்களை பற்றிய படத்தில், வெள்ளை நிற முன்னணி நடிகர்களை டார்க் மேக்கப் போட்டு நடிக்க வைத்து, பிளாக்பஸ்டர் ஆக்கி, திறமையான கருப்பு நிற நடிகர்களின் வாய்ப்பு பறிபோகும் சூழலை எதிர்த்து ஒருபுறம் நிற அரசியல் நடந்து வரும் நிலையில், மூன்றாம் பாலினத்தவரின் கதைகளில் அவர்களையே நடிக்க வைக்க வேண்டும் என்ற குரல் ஒலித்து வருகிறது.

     நடிகர்கள்

    நடிகர்கள்

    திருநங்கைகள் கதாபாத்திரம் என்றாலே, பொதுவாகவே ஆண்களையே நடிக்க வைப்பது வழக்கம் ஆகி வருகிறது. காஞ்சனா படத்தில் சரத்குமார், அதன் ரீமேக்கான லக்‌ஷ்மி பாம் படத்தில் அக்‌ஷய் குமார், பிரகாஷ் ராஜ் என பல நடிகர்கள் திருநங்கைகளாக நடித்துள்ளனர். ஹாலிவுட் படங்களிலும் பல நடிகர்கள் திருநங்கைகளாக நடித்துள்ளனர்.

    குவிகிறது கண்டனம்

    குவிகிறது கண்டனம்

    இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பெண் நடிகைகளும், மூன்றாம் பாலினத்தவர் கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், அதன் கூடவே சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது. நடிகர்களோ அல்லது நடிகைகளோ இப்படி மூன்றாம் பாலினத்தவர் கதாபாத்திரத்தில் நடிப்பதன் காரணமாக உண்மையான மூன்றாம் பாலினத்தவர் நடிகர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    விலகினார் ஹாலி பெர்ரி

    விலகினார் ஹாலி பெர்ரி

    சமீபத்தில், நடிகை ஹாலி பெர்ரி, பெண் ஒருவர் மூன்றாம் பாலினத்தவ ஆணாக மாறும் கதையில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, மூன்றாம் பாலினத்தவர்களிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்புகளால், தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு, அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே

    ஏற்கனவே

    மூன்றாம் பாலினத்தவ கதாபாத்திரத்தில் முன்னதாக அவெஞ்சர்ஸ் பட நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ரப் அண்ட் டக் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அப்போதும், இதுபோன்ற பிரச்சனைகள் கிளம்ப, அந்த படத்தில் இருந்து அவரும் விலகியது குறிப்பிடத்தக்கது.

    ஹாலிவுட்டில் அதிகரிப்பு

    ஹாலிவுட்டில் அதிகரிப்பு

    மூன்றாம் பாலினத்தவ நடிகர்கள் தற்போது ஹாலிவுட்டில் கணிசமாக உயர்ந்து வருகின்றனர். லாவர்ன் காக்ஸ், எலியாட் ஃபெட்சர், டிரேஸ் லிசெட், ஆசியா கேட் டில்லன், பிரையன் மைக்கேல் ஸ்மித், அமியா ஸ்காட் என பல மூன்றாம் பாலினத்தவர்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிற நிலையில், அந்த படத்தில் நிஜ மூன்றாம் பாலினத்தவரையே நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    Read more about: halle berry transgender hollywood
    English summary
    After facing backlash online, actress Halle Berry has pulled out of a transgender role she was supposed to play in an upcoming film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X