உலக லேடி சூப்பர்ஸ்டாருக்கு பர்த்டே.. கொண்டாடும் ரசிகர்கள்.. டிரெண்டாகும் #AngelinaJolie

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் பிறந்தநாளை தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஹாலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாரான ஏஞ்சலினா ஜோலி இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

டாம்ப் ரைடர், மிஸ்டர் அண்ட் மிஸ்டர் ஸ்மித், மெலஃபிஷண்ட், சால்ட் என பல பிளாக்பஸ்டர் படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஹேப்பி பர்த்டே ஏஞ்சலினா

ஹேப்பி பர்த்டே ஏஞ்சலினா

1975ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் ஏஞ்சலினா ஜோலி. 1982ம் ஆண்டு வெளியான Lookin' to get out படத்தில் தனது தந்தையும் நடிகருமான ஜான் வோய்கட்டின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

உலகளவில் ரசிகர்கள்

உலகளவில் ரசிகர்கள்

1993ம் ஆண்டு சைபர்க் 2 எனும் லோ பட்ஜெட் படத்தில் நாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் படு தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும், எந்த படமும் எடுபடவில்லை. அதனால், சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய அவருக்கு, ஜியார்ஜ் வாலேஸ் தொடர் கோல்டன் குளோப் விருதினை பெற்றுத் தந்தது. ஹாலிவுட் நடிகையாக பின்னர் அறியப்பட்ட அவருக்கு உலகளவில் ரசிகர்கள் குவிந்தனர்.

டாம்ப் ரைடர்

டாம்ப் ரைடர்

கடந்த 2001ம் ஆண்டு வெளியான லாரா கிராஃப்ட்: டாம்ப் ரைடர் படம் தான் ஏஞ்சலினா ஜோலியை ஹாலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாராகவும், உலகளவில் அவருக்கு ரசிகர்களையும் பெற்றுத் தந்த படம். சாகச காட்சிகள் நிறைந்த அந்த படத்தின் இரண்டாம் பாகம் 2003ம் ஆண்டு வெளியாகி அதுவும் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது.

திருமணமும் விவாகரத்தும்

திருமணமும் விவாகரத்தும்

ஹாலிவுட்டில் ஹாட் டாபிக் நடிகையாக வலம் வந்த ஏஞ்சலினா ஜோலி முதன் முதலாக 1996ம் ஆண்டு ஜானி லீ மில்லர் எனும் அமெரிக்க நடிகரை மணந்து கொண்டார். ஆனால், மூன்றே ஆண்டுகளில் 1999ம் ஆண்டே அவரை விவாகரத்தும் செய்தார். பின்னர், 2000ம் ஆண்டு பில்லி பாப் தார்ன்டன் எனும் இயக்குநரை மணந்த ஏஞ்சலினா 2003ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். பிரபல ஹாலிவுட் நடிகரான பிராட் பிட்டை 2014ம் ஆண்டு திருமணம் செய்த ஏஞ்சலினா 2019ம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

உலகளவில் டிரெண்டிங்

உலகளவில் டிரெண்டிங்

ஏஞ்சலினா ஜோலியின் 45வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உலகளவில் #AngelinaJolie என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை உள்ள உலக ரசிகர்கள், ஹேப்பி பர்த்டே பேபி டால் என பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் அள்ளி வீசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X