மாயத் திருடன்.. மந்திர புன்னகையாளன்.. மனங்களை கொள்ளையடித்த கேப்டன்.. ஹேப்பி பர்த்டே #JohnnyDepp

லாஸ் ஏஞ்சல்ஸ்: பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் கேப்டன் ஜேக்ஸ் பேரோ எனும் கடற்கொள்ளையனாக நடித்த நடிகர் ஜானி டெப்பின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன், ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட், எட் வுட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனக்கான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கும் ஜானி டெப்பின் பிறந்தநாளை முன்னிட்டு, #JohnnyDepp என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

1963ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி பிறந்த ஜானி டெப், இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பேய் படத்தில் அறிமுகம்

பேய் படத்தில் அறிமுகம்

1984ம் ஆண்டு வெளியான A Nightmare on Elm Street படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜானி டெப். தொடர்ந்து பிரைவேட் ரெசார்ட், பிளாடூன், க்ரை பேபி, எட்வார்ட் சிஸர் ஹேண்ட்ஸ், அரிசோனா ட்ரீம் உள்ளிட்ட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ஹாலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்தார்.

கேப்டன் ஜேக்ஸ்பேரோ

கேப்டன் ஜேக்ஸ்பேரோ

ஜானி டெப் என்ற பெயரை மறக்கடிக்கும் அளவுக்கு கடந்த 2003ம் ஆண்டு வெளியான பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் இவர் ஏற்று நடித்த கேப்டன் ஜேக்ஸ்பேரோ கதாபாத்திரம் இவருக்கு அமைந்தது குறிப்பிடத்தக்கது. உலகளவில் பல மில்லியன் ரசிகர்களை இவருக்கு சேர்த்துக் கொடுத்த அந்த படத்தின் 5 பாகங்கள் இதுவரை வெளியாகி இருக்கிறது.

ஆஸ்கர்

ஆஸ்கர்

தனது சிறப்பான நடிப்புக்காக எத்தனையோ விருதுகளை குவித்துள்ள நடிகர் ஜானி டெப், மூன்று முறை ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: தி கர்ஸ் ஆஃப் பிளாக் பியர்ல், ஃபைண்டிங் நெவர்லேண்ட், ஸ்வீனி டோட் உள்ளிட்ட படங்களுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் நாமினியாக ஜான் டெப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்வீனி டோட் படத்திற்காக கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார்.

வெரைட்டி

வெரைட்டி

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படம் உலகளவு இவரது புகழை வெளிப்படுத்தினாலும், அந்த படத்தை விட சூப்பரான நடிப்பையும், வித விதமான கெட்டப்புகளில் வெரைட்டி வெரைட்டியாக பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார் ஜானி டெப். ஜானி டெப்பின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியான கதாபாத்திர தொகுப்பு புகைப்படத்தை போட்டு இந்த ரசிகர் வாழ்த்துக் கூறியுள்ளார்.

மந்திர புன்னகையாளன்

மந்திர புன்னகையாளன்

கடற் கொள்ளையனாக மட்டுமின்றி, மக்கள் மனங்களை கொள்ளையடித்து, அவர்களின் உதடுகளில் புன்னகையை வரவழைக்கும் திறமை கொண்டவர் நடிகர் ஜானி டெப். ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் படத்தில் தனது அடையாளமே தெரியாத வண்ணம் மேக்கப் போட்டுக் கொண்டு, குழந்தைகளை குஷிப்படுத்த அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார்.

ஈடு இணையற்ற நடிகர்

ஈடு இணையற்ற நடிகர்

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் மூலம் இவர் மீது பைத்தியமாகி இவர் நடித்த ஆரம்ப கால படங்களை தேடி போய் பார்த்தவர்களுக்கு, செம ஹேண்ட்ஸமான யங் ஹீரோ ஜானி டெப் நடித்த பல அற்புதமான படங்கள் காண கிடைக்கும். Cry Baby, Ed Wood, Dead Man, The Brave உள்ளிட்ட படங்கள் எல்லாம் இளம் வயது ஜானி டெப்பின் அபார நடிப்புத் திறமையை நமக்கு அடையாளம் காட்டும்.

அடுத்த பாகம்

அடுத்த பாகம்

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் அடுத்த பாகத்திற்காக உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது. ஜானி டெப்பின் மனைவியும் ஆக்வாமேன் பட நடிகையுமான ஆம்பர் ஹெட், சமீபத்தில், இவரை விவாகரத்து செய்ததும், இவருக்கு கொடுத்த சித்திரவதைகளை வெளியிட்டு, இழப்பீடு தொகையாக கேட்ட பல நூறு கோடிகளை தர முடியாது என மறுத்து வழக்கு நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஜாக்ஸ்பேரோவாக ஜானி டெப்பை இந்த உலகம் காணுமா? என்ற கேள்விக் குறியும் அந்த வழக்கின் காரணமாக எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X