எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. டிராகனின் செல்ல மகள்.. ஹேப்பி பர்த்டே எமிலியா!

கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாயகி எமிலியா கிளார்க்கின் 33வது பிறந்த நாள் விழா இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் முடிவடைந்த நிலையில், அடுத்து எமிலியாவை எப்படி பார்க்கப் போகிறோம் என்ற

லாஸ் ஏஞ்சல்ஸ்: கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாயகி எமிலியா கிளார்க் இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர் முடிவடைந்த நிலையில், ஹாலிவுட் படங்களில் எமிலியாவை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ்

கேம் ஆஃப் த்ரோன்ஸ்

2011ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 8 பாகங்களாக ஹெச்.பி.ஓ.,வில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஒளிபரப்பானது. இந்த தொடருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்களை தாண்டி பல சினிமா பிரபலங்களின் ஃபேவரைட் தொடராக கேம் ஆஃப் த்ரோன்ஸ் இருந்து வந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தனது எண்ட் கார்டை போட்டது.

டிராகன் மகள்

டிராகன் மகள்

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் டார்காரியன் ராணி டேனரிஸ் கதாபாத்திரத்தில் எமிலியா நடித்திருந்தார். டேனரிஸை மணக்கும் கிரேட் கால் இறந்த பின்பு, அவனது டிராகன்களின் அரவணைப்பில் பல ராஜாங்கங்களை தனது காலடிக்குள் கொண்டு வரும் சர்வாதிகாரியாக எமிலியா மிரட்டியிருந்தார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

1986ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி லண்டனில் பிறந்த எமிலியா, லண்டன் டிராமா சென்டரில் தனது கல்வியை பயின்றார். ஹாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால், லாஸ் ஏஞ்சல்ஸில் குடிபுகுந்தார். இன்று எமிலியாவின் 33வது பிறந்த நாள் விழா அவரது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கேம் ஆஃப் த்ரோன்ஸில் நடித்து வந்த எமிலியா, அவ்வப்போது ஒரு சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். அதில், 2015ம் ஆண்டு அர்னால்டு நடிப்பில் வெளியான டெர்மினேட்டர் ஜெனிசிஸ் மற்றும் 2016ம் ஆண்டு வெளியான மி பிஃபோர் யூ படங்கள் எமிலியா கிளார்க்குக்கு நல்ல வெற்றியை பெற்றுத் தந்தன.

ரசிகர்களின் ஆசை

ரசிகர்களின் ஆசை

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர் முழுவதுமாக முடிவடைந்துவிட்ட நிலையில், இந்த டார்காரியன் குயின் பெரிய பெரிய ஹாலிவுட்டில் பார்க்க வேண்டும் என்பதே இவரது ரசிகர்களின் ஆசையாக உள்ளது. அதே முயற்சியில் தான் எமிலியாவும் தரமான ஹாலிவுட் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அடுத்த ரிலீஸ்

அடுத்த ரிலீஸ்

ஏப்ரல் மாதத்தில் இறுதியாக த்ரோனை அடையும் நேரத்தில் நாயகன் ஜான் ஸ்நோவின் கரத்தால் கொல்லப்பட்ட டேனரிஸை இனி எப்போது காண்போம் என ஏங்கி வரும் ரசிகர்களுக்கு வரும் நவம்பர் மாதம் 8ம் தேதி வெளியாகவுள்ள லாஸ்ட் கிறிஸ்துமஸ் படத்தில் நாயகியாக காணும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இதுபோன்று மேலும் பல வெற்றி படங்களை கொடுக்க எமிலியா கிளார்க்கு வாழ்த்துகள்!

More from Filmibeat

Read more about: hollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X