இதே பொழப்பா போச்சு.. மயிரிழையில் மிஸ்ஸான விமான விபத்து.. விசாரணை வலையில் ஹாரிசன் ஃபோர்ட்

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் ஃபோர்ட், சிறிய ரக விமானங்களை இயக்கும் பைலட்டாகவும் செயல்பட்டு வருகிறார்.

விமானம் ஓட்டுவதில் பிரியம் கொண்ட 77வயதான ஸ்டார் வார்ஸ் நடிகர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாதோர்ன் விமான நிலையத்தில் வழக்கம் போல விமானம் ஓட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

Harrison Ford piloting plane that wrongly crosses runway

அப்போது, விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகளின் எச்சரிக்கையை சரியாக கவனிக்காத ஹாரிசன் ஃபோர்ட், மற்றொரு விமானம் தரையிறங்கும் பகுதியில், அவசரப்பட்டு குறுக்கிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தனது தவறை உடனடியாக உணர்ந்து கொண்ட இண்டியானா ஜோன்ஸ் நடிகர் ஹாரிசன் ஃபோர்ட், அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

எதிர்பாராமல், எந்தவொரு விபத்தும் நடைபெறாத நிலையில், ஹாரிசன் ஃபோர்ட் செய்த தவறு குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருவதாக ஹாரிசன் ஃபோர்டின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு, இரண்டு பேர் ஓட்டக் கூடிய சிறிய ரக விமானத்தை ஹாரிசன் ஓட்டியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் கோல்ஃப் மைதானத்தில் தரையிறங்கியதில் ஹாரிசன் ஃபோர்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2017ம் ஆண்டில், 110 விமானிகளுடன் போயிங் 737 விமானத்தை இயக்கிய ஹாரிசன் ஃபோர்ட், ரன் வேயில் தரையிறக்காமல் டாக்ஸி வேயில் தரையிறக்கியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

கல்லூரி காலத்தில் விமான ஓட்டியாக வர வேண்டும் என படித்த ஹாரிசன் ஃபோர்ட், காசு இல்லாத காரணத்தால் அந்த கல்வியை தொடர முடியவில்லை.

ஹாலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக மாறிய ஹாரிசன் ஃபோர்ட் தற்போது பல விமானங்களுக்கு சொந்தக்காரராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

77 வயதாகும் ஹாரிசன் ஃபோர்ட் எந்த மாதிரியான மனநிலையில், விமானங்களை இயக்குகிறார் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X