"ஹாரிபாட்டர் ஓநாய் மனிதன்" டேவிட் திடீர் மரணம்... பாலைவனத்தில் கிடந்த உடல்!

கலிபோர்னியா: ஹாரிபாட்டர் படத்தில் ஓநாய் மனிதனாக நடித்த டேவிட் லெஜினோ மர்மமான முறையில் இறந்துள்ளார். பாலைவனம் ஒன்றில் அவர் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டில் பெரும் வசூலைக் கொடுத்த படம் ஹாரிபாட்டர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இதன் ரசிகர்கள்.

இதன் 3 பாகங்களில் ஓநாய் மனிதனாக நடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் லெஜினோ.

பாலைவனத்தில் உடல்

பாலைவனத்தில் உடல்

இந்த நிலையில், 50 வயதான இவர் கலிபோர்னியா மாகாணத்தின் டெத் வேலி பகுதியில் உள்ள பாலைவனத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஹெலிகாப்டரில் மீட்பு

ஹெலிகாப்டரில் மீட்பு

தகவல் அறிந்ததும் ஹெலிகாப்டரில் சென்று அவரது உடலை காவல்துறையினர் மீட்டனர்.

வெப்பம் தாங்காமல் மரணமா...

வெப்பம் தாங்காமல் மரணமா...

பாலைவனப்பகுதியில் நீண்ட தூரப்பயணம் செய்த அவர் பாலைவனத்தின் கடுமையான வெப்பம் தாங்காமல் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாக்ஸர்

பாக்ஸர்

டேவிட் லெஜினோ நடிகராவதற்கு முன்பு, குத்துச்சண்டை வீரர் ஆக இருந்தார். தற்போது, இவர் நடித்துள்ள ஸ்வர்டு ஆப் வெஞ்சன்ஸ் என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அதிர்ச்சியில் ஹாலிவுட்

அதிர்ச்சியில் ஹாலிவுட்

டேவிட்டின் இந்த திடீர் மரணம் ஹாலிவுட்டில் அதிர்ச்சி அலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே டேவிட்டின் மரணத்துக்கான காரணம் தெரிய வரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X