திருமணம் ஆகாமலே அப்பாவாகப் போகும் ஹாரி பாட்டர் ஹீரோ.. காதலியுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாரி பாட்டர் ஹீரோ என்றதுமே அந்த கண்ணாடி போட்ட அமுல் பேபி குழந்தை தான் இன்னமும் நம் கண் முன்னே வந்து செல்லும்.

கடந்த 2001ம் ஆண்டு வெளியான ஹாரி பாட்டர் தி பிலோஷபர் ஸ்டோன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக கதையின் நாயகனாக நடித்த டேனியல் ராட்க்ளிஃப் (Daniel Radcliffe) கூடிய சீக்கிரமே தந்தையாக போவதாக அறிவித்துள்ளார்.

2001ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 8 பாகங்களாக வெளியான ஹாரி பாட்டர் படங்களில் டேனியர் ராட் க்ளிஃப் நாயகனாக நடித்து அசத்தினார்.

12 வயதில் ஹீரோ

12 வயதில் ஹீரோ

1989ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்த டேனியல் ராட்க்ளிஃப் தனது 11 வயதிலேயே ஹாரி பாட்டர் படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். 2011ம் ஆண்டு தனது 12ம் வயதில் வெளியான ஹாரி பாட்டர் முதல் பாகத்தில் அவர் தான் ஹீரோ. தொடர்ந்து ஹாரி பாட்டர் சீரிஸின் 8 பாகங்களில் நடித்துக் கொண்டே வாலிபனாக வளர ஆரம்பித்த அவர் தற்போது காதலியுடன் லிவிங் டுகெதரில் உள்ளார்.

10 வருஷமா லிவிங் டுகெதர்

10 வருஷமா லிவிங் டுகெதர்

23 வயதிலேயே எரின் டார்க் எனும் நடிகையுடன் காதலில் விழுந்த ஹாரி பாட்டர் ஹீரோ கடந்த 10 ஆண்டுகளாக தனது காதலியுடன் தனி வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். 2013ம் ஆண்டு வெளியான கில் யுவர் டார்லிங்ஸ் படத்தில் இணைந்து நடித்ததில் இருவரும் காதல் வயப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மேலும், சில படங்களிலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

காதலி கர்ப்பம்

காதலி கர்ப்பம்

திருமணம் ஆகாமல் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஒன்றாக காதலியுடன் வாழ்ந்து வரும் டேனியல் ராட்க்ளிஃப் சமீபத்தில் தான் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவை தனது காதலியுடன் சேர்ந்து எடுத்திருக்கிறார். இந்நிலையில், சில மாதங்களாக தனது காதலி கர்ப்பமாக இருக்கிறார் என்கிற சந்தோஷ செய்தியை ஹாரி பாட்டர் நடிகர் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அப்பா ஆகப்போகும் ஹாரி பாட்டர் நடிகர்

அப்பா ஆகப்போகும் ஹாரி பாட்டர் நடிகர்

ஹாரி பாட்டர் நடிகர் டேனியல் ராட்க்ளிஃப்புக்கு தற்போது 33 வயதாகிறது. கூடிய சீக்கிரமே தான் அப்பாவாகப் போகிறேன் என்கிற சந்தோஷ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குழந்தைப் பெற்றுக் கொள்வதும் அதனை வளர்ப்பதும் தனக்கு ரொம்பவே பிடித்தமான விஷயம் என்றும் இப்போது தான் அதற்கான நேரம் அமைந்துள்ளது என டேனியல் ராட்க்ளிஃப் கூறியுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

ஹாரி பாட்டர் ஹீரோ டேனியல் க்ளிஃப் விரைவில் அப்பாவாகப் போகும் செய்தியறிந்த அவரது ரசிகர்கள் டேடி டேனியல் என ஹாஷ்டேக் போட்டு அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குழந்தை பிறப்பதற்கு முன்னதாக தனது காதலியை திருமணம் செய்து கொள்ளவும் டேனியல் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X