'அறைக்குள் சென்றபோது நிர்வாணமாக இருந்தார்..' அந்த தயாரிப்பாளர் மீது மேலும் 4 பாலியல் வழக்குகள்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பாலியல் வழக்குக்காக கைது செய்யப்பட்டுள்ள அந்த தயாரிப்பாளர் மீது மேலும் 4 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
Recommended Video
ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன். இவர் சினிமா வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக மீ டூ புகார் எழுந்தது.
இதில் பிரபல ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, கைனெத் பால்ட்ரோ, கார டெலவிங்னி உள்பட 80 பேர் அவர் மீது பாலியல் புகார் கூறினார்கள்.

ஹாலிவுட் பரபரப்பு
இந்த பாலியல் புகார் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 2006 ஆம் வருடம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, திரைப்பட தயாரிப்பு உதவியாளர் மிமி ஹலேயி என்பவரும், 2013 ஆம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பெயர் வெளியிட விரும்பாத நடிகை ஒருவரும் வழக்கு தொடர்ந்தனர்.

23 வருடம் சிறை
இதன் விசாரணை அமெரிக்காவின், நியூயார்க் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நடிகைகளின் பாலியல் புகார்களை வெயின்ஸ்டீன் மறுத்திருந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 23 வருடம் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து நியூயார்க் சிறையில் அடைக்கப்படார், ஹார்வி வெயின்ஸ்டீன்.

நான்கு வழக்குகள்
சமீபத்தில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கு சிகிச்சை பெற்று மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் அவர் மீது மேலும் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 43 வயது பெண் ஒருவர் தன்னை அவர் ஓட்டல் அறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது புகாரில் கூறியுள்ளார். அப்போது தனக்கு 17 வயது. அவரைச் சந்திக்கச் சென்றேன்.

சொல்லக்கூடாது
அறைக்குள் கிட்டத்தட்ட நிர்வாணமாகவே நின்றிருந்தார். நான் மறுத்தும் என்னை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்தார். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டினார் என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பெண், கான் திரைப்பட விழாவில் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறியுள்ளார்.

ஹாலிவுட்டில்
நியூயார்க்கை சேர்ந்த 38 வயது பெண் ஒருவரும் ஹங்கேரியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவரும் தங்களை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளனர். இந்த 4 வழக்குகளும் கடந்த வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











